பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 485

பிள்ளைகள் செய்வன செய்யாய்;

பேசின் பெரிதும் வலியை; கள்ள மனத்தி லுடையை,

காணவே தீமைகள் செய்தி உள்ளம் உருகினன் கொங்கை

ஒட்டந்து பாய்ந்திடு கின்ற பள்ளிக் குறிப்புச்செய் யாதே;

பாலமு துண்ண நீ வாராய் (6) (செய்வன-தீம்புகள்; வலியை-மிடுக்குடைய கள் ளம்-கபடம் ஒட்டந்து-பால் பெருகி; பள்ளிக் குறிப்பு-உறக்கக் குறிப்பு] என்பது ஆறாம் பாசுரம், பாலமிழ்தம் பருக வருமாறு: அழைக்கின்றாள். தம்மைத் தாயாகவும் எம்பெருமானைக் கண்ணனாகவும் பாவித்துக்கொண்டு கிருஷ்ணாநுபவம் பெறுகின்றார். ஒவ்வொரு பாசுரமும் இவ்வாறு பல்வேறு அதுபவங்களைப் பேசுகின்றன.

'கண்ணா! இத்திருவாய்ப்பாடியில் நீ மட்டும் அன்று: நூற்றுக் கணக்கான பிள்ளைகள் உளர். உன்னைப்போல் அவர்களும் தீம்பு செய்பவர்களே. ஆயினும் நீ செய்யும் தீம்பு மற்ற பிள்ளைகள் செய்யும் தீம்புகளைப் போலன்று. நீ மிகவும் மிடுக்குடையவன். நீ கள்ள நெஞ் சினையுடையாய். நீ தீம்பு செய்வதைத் தடுத்து உன்னைத் தண்டிக்க நினைப்பவர்களும் தம் முகத்தில் கையை வைத் துக்கொண்டு இஃதென்ன ஆச்சரியம்! என்று வியந்து காணும்படியான தீம்புகளைச் செய்கின்றாய். அத்தீம்பு களைக் காணவே என் உள்ளம் உருகுகின்றது; முல்ை வழியேபாலும் வழிகின்றது. நீயோ முலையுண்பதில் விருப் பற்று, கண்கள் சிவப்பது, மூரிநிமிர்வது, கொட்டாவி விடு வது முதலான உறக்கக் குறிப்புகளைக் காட்டுகின்றாய். இவற்றைத் தவிர்த்துப் பாலமுதம் பருகவாராய்!' என்ற ழைக்கின்றாள்.