பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

குளம் அடைந்து அம் மருத்துர்ை இல்லம் சென்று அவரு டன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது குமுத வில்லி ஏதோ காரியமாக இல்லத்திலிருந்து புறத்தே வரக் கண்டார்; அந்த நங்கையின் எழில் திருமேனியும் அன்ன நடையும் மருண்டமான் நோக்கும் மன்னரைக் கவர்ந்தன. மருத்துவரும் அம்மங்கையர் திலகம் தம்மையடைந்த வரலாற்றை மன்னருக்கு எடுத்துரைத்தார். அவளுடைய திருமணம்பற்றியும் தமக்குள்ள கவலையைத் தெரிவித் தார். அரசரும் அவளைத் தாம் மணப்பதாக உறுதி கூறி னார். வளர்ப்புத் தாய் தந்தையரும் இவளை அரசருக்குத் தர சிந்தித்துக் கொண்டிருந்தனர். உடனே குமுதவல்லி குறுக்கிட்டு :திருவிலச்சினையும் பன்னிரு திருமண் காப்பும் உடையவர்க்கொழிய மற்றவர்க் கென்னைப் பேசலொட்டேன்' என்று தன் குறிக்கோளைத் தெரிவித்

தாள.

கலியனும் உடனே திருகறையூர் சென்று அங்கு எழுந் தருளியுள்ள நம்பி திருமுன்பு திருவிலச்சினை பெற்றுப் பன்னிரண்டு திருமண்காப்புகளையும் தரித்துக் கொண்டு வந்தார். குமுதவல்லியார் மன்னரை நோக்கி, அரசர் பெருமானே, ஓராண்டுக் காலம் நாடோறும் 1008 திருமா லடியார்கட்கு அ.மு.தி செய்வித்து அவர்களுடைய ரீபாத தீர்த்தமும் பிரசாதமும் உண்டு நிறைவேற்றினாலொழிய நான் தங்களைக் கணவனாக ஏற்றுக்கொள்வதற்கில்லை என்று மற்றொரு நிபந்தனை விதித்தாள். இவரும் அவள்மீது கொண்ட ஆராக்காதலாலே அங்ங்னம் செய்வ தாக வாக்குறுதி செய்து தந்தார். நிபந்தனையை நிறை வேற்றவும் செய்தார். அதன் பிறகு குமுதவல்லியாரை :நாடும் ஊரும் அறியக் கண்ணாலம் கோடித்துக்'

4. கும்பகோணத்திற்கருகிலுள்ள நா ச் சி யார்

கோயில்' என வழங்கும் திருத்தலம்.