பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 பரகாலன் பைந்தமிழ்

என்று போற்றியுரைப்பர். அழிப்பொடு அளிப்பவன் தானே' என்றும், காக்கும் இயல்பினன் கண்ண பெரு மான் என்றும். பேசுவர். சிறார் வீடுகட்டி அழிக்குமாப் போலே இம் முத்தொழில்களும் இவனுக்குத் தன் இச்சை யாலே உண்டாகும் விளையாட்டேயாகும். இதனை நம்மாழ்வார்,

துன்பமும் இன்பமும் ஆகிய

செய்வினை யாய்உல் கங்களுமாய் இன்பமில் வெந்நர காகி

இனியநல் வான்சுவர்க் கங்களுமாய் மன்பல் உயிர்களும் ஆகிப்

பலபல மாய மயங்குகளால் இன்புறும் இவ்விளை யாட்டுடை

யான்"

என்று குறிப்பிடுவர். இதனையே கம்பநாடன்,

உலகம் யாவையும் தாம் உள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லா விளை யாட்டுடை யாரவர்' என்று விளங்குவன். ஆழ்வார்களின் பாசுரங்களில் தோய்ந்து நின்ற நிலையே இக்கூற்றுக்குக் காரண மாகலாம்.

உண்டு உமிழ்தல் பொதுவாக . ஆழ்வார்களின் பாசுரங்களில் உண்டு உமிழ்தல் என்ற தொடர் காணப்பெறுதல்போல திருமங்கை ஆழ்வார் பாசுரங் களிலும் காணப்பெறுகின்றது.

6. திருவாய். 1. 9: 8 7. டிெ 2, 2: 9 8. டிெ 3. 10: 7

9. கம்பரா. காப்பு