பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 505

ஈசுவரன் அனைத்திற்கும் ஆதாரமானவன்; அனைத் தையும் அடக்கி ஆள்பவன்; அனைத்தினுடைய பலனை யும் அநுபவிப்பவன். மேலும் அசித்து (இவ்வுலகப் பொருள்) மாறுபாடடைவதற்கும் இவனே காரணன்.

கருமமும் கரும பலனும்

ஆகிய காரணன் (திருவாய் 3.5:10)

என்ற திருவாய் மொழித் தொடரால் இதனை அறியலாம். இறைவன் தன்னை அடைந்தவருடைய எல்லா வினைகளை யும் போக்குபவன். சகல வேதங்களாலும் போற்றப்பெறு பவன். இந்த உலகிலுள்ள உயிர்களின் பக்தி மூலமும் பிரபத்தி மூலமும் வீடுபேற்றினை அடைவதற்கு இவனே துணையாவான்.

தாய்நி னைந்தகன் றேயொக்க என்னையும்

தன்னை யேநினைக் கச்செய்து தான் எனக் காய்நி னைந்தருள் செய்யும் அப்பனை (3.5:10) என்பர் கலியன். கன்றானது எப்பொழுதும் தன் தாயையே நினைத்துக் கொண்டிருக்குமாப்போலே உலகிக் கெல்லாம் தாயாகிய தன்னையே தானும் (ஆழ்வாரும்) நினைத்திருக்குமாறு செய்தவன் என்கின்றார்.

நித்திய விபூதியாகிய பரமபதத்தில் இவனுக்கெனத் தனியான திவ்விய மங்கள உருவம் உண்டு. இந்த உருவம் ஈடும் எடுப்புமற்றது. பேரொளியினை உடையது; பேர ழகு வாய்ந்து கண்டாரை ஈர்ப்பது பயிலும் சுடர்ஒளி மூர்த்தி, பங்கயக் கண்ணன் (திருவாய் 3.7:1), மாசறு சோதி என் செய்யவாய் மணிக்குன்றம் (டிெ 5.3:1) என்று இவ்வுருத்தின் அழகில் நெஞ்சைப் பறிகொடுத்த ஆழ்வார் களின் கூற்றுகளைப் பாசுரங்களெங்கும் காணலாம். இந்த உருவத்துடன் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளாதேவி ஆகியோருக்கு நாயகனாக இருப்பவன். இதனை,