பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 பரகாலன் பைந்தமிழ்

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கு இன்பன்; நல்புவிதனக் கிறைவன்;

தன்துணை ஆயர் பாவைநப் பின்னை

தனக்கிறை; (2.3:5)

என்ற பரகாலரின் வாக்கால் அறியலாம்.

சரீர-சரீரி பாவனை : சேதநமும் அசேதனமும் இறை வனின் திருமேனியாக அமைந்துள்ளன என்பது வைணவ தத்துவம். திருமங்கையாழ்வார்,

திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்

செழுநிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள் களுமாய் நின்றவன் (4. 3: 3)

என்ற பாசுரத்தில் இந்த இரண்டு தத்துவங்களையும் சேர்த்துக் கூறுவதைக் காணலாம். மேலும்,

பல்வநீர் உடையாடை ஆகச் சுற்றி

பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம்

திருவடியா நின்றான் (6. 6: 3) என்பதில் அசித்தை மட்டிலும் உடலாகக் காட்டுவர். சுத்த சத்துவம், மிச்ரதத்துவம், சத்துவ குனியம் ஆகிய மூன்று பகுதிகளும் ஈசுவரனுக்கு உடலாயும் நித்தியர் முத்தர் பத்தர் என்ற மூன்றுவித ஆன்மாக்களும் ஈசுவர னுக்குப் போக்கியமாயும் (அநுபவப் பொருளாயும்), போகத்திற்கு உபகரணமாயும், போகத்தை அநுபவிக்கத் தக்க இடங்களாயும் இருக்கும் என்பதையும் தெளிவாக அறியலாம்.

சரீர - சரீரி பாவனையை விளக்கும் பாசுரங்கள் இந்த ஆழ்வாரின் அருளிச் செயல்களில் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சில :