பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 515,

தண்ணீர் வேட்கை கொண்டவனுக்கு வேறு இடங்கட் குச் செல்ல வேண்டாதபடி தண்ணிர் தான் நிற்கும் இடத் தில் பூமிக்கடியில் இருந்தாலும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது நீர் கிடைக்காதிருப்பது போல, எம்பெருமானைக் கண்டு பற்ற வேண்டும்' என்ற அவா இருந்தும் 'கட்கிலி (திருவாய் 7.2:3) என்று நம் மாழ்வார் குறிப்பிட்டவாறு கண்களால் காணமுடியாத படி அட்டாங்க யோக முயற்சியால் மட்டிலும் காணக் கிட்டுபவன் அந்தர்யாமித்துவ நிலையிலுள்ள இறைவன். " அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது" (திரு நெடுந் 14) என்று பரகாலர் கூறியவாறு இந்தலீலா வியூ திக்கு அப்பாற்பட்டிருப்பவன் பரத்துவ நிலை எம்பெரு மான் அப்படி மிக்க நெடுந்துாரம் அன்றி இந்த உலகின் எல்லைக்குள் இருப்பினும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்' (பெரிய திருவந் 34) என்று சடகோ பர் கூறுகின்றபடி கேட்டிருக்கும் என்பதன்றிச் சென்று காண அரிதாம்படி இருப்பவன் வியூகநிலை எம். பெருமான்.

மிக அண்மையிலிருந்தும் வெள்ளம் வருங்காலத்தில் இருந்தவர்கட்கு மட்டிலும் பருகும்படியாய் வேறு காலங் களில் இருப்பவர்கட்குப் பருகுவதற்கு அரிதாய் இருந்தும் பெருக்காறு போலே, மண்மீது உழல்வாய்” (திருவாய் 6.9:5) என்று நம்மாழ்வார் கூறுவதுபோல் பூமியிலே அவதரித்துச் சஞ்சரித்தும் அக்காலத்தில் வசித்தவர்கட்கு மட்டிலும் அடையத் தக்கவர்களாய்ப் பிற்காலத்தில் உள்ள இவனுக்குக் கிட்டாத நிலையில் இருப்பவர்கள் விபவ நிலை எம்பெருமான்கள். மேற்கூறிய எம்பெரு மான்கள் போலன்றி, காண்பதற்குத் தேசத்தாலும் காலத் தாலும் கரணத்தாலும் கிட்டுவதற்குச் சேயதா யன்றி, கோயில்களிலும் வீடுகளிலும் என்றும் ஒக்க எல் லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படி பின்னானார்