பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 பரகாலன் பைந்தமிழ்

இந்த சூக்தி ஈண்டு அதுசந்திக்கத் தக்கது. இதன் கருத்து: பிள்ளையழகிய மணவாளரையர் என்பவர் ஏதோ ஒரு காரியமாக திருச்சேறை வழியாய் ஓரிடத்திற்கு எழுந்தருள நேர்ந்தது. அவர் திருச்சேறைப் பகுதியினுட் புகாமல் வயல் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு அவரைக் கண்டாரொருவர் வயல் வழியே போவானேன்? திருப்பதி யினுள்ளே புகுந்து சாரநாதப் பெருமாளைச் சேவித்துப் போகலாகாதோ?’ என்று கேட்க, அதற்கு அரையர் சமத்காரமாக ஒரு விடையளித்தார். அது யாருதனில்: 'தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலை மேலாரே என்றார்; அப்பாசுரத்தின்படி, திருச்சேறை எம்பெருமானைச் சேவிப்பவர்கள் ஆழ்வா ருடைய திருமுடியிலேற வேண்டியதாகுமே; அது நமக்குப் பெருத்த அபசாரமல்லவா? அதற்கு அஞ்சியே உள்புகா மல் கரையோரமே போய் விடுகிறேன்’ என்றாராம், இஃது ஒரு சுவையான பேச்சு, திருச்சேறை எம்பெரு மானைச் சேவிப்பவர்கள்பக்கவில் ஆழ்வார் கொண்டுள்ள பிரதிபத்தியை விளங்கக் காட்டினபடி இது.

பாகவதர்களின் சம்பந்தப் பெருமையை,

வேதகப் பொன்போலே இவர்க ளோட்டை சம்பந்தம்'

ஒன்று பேசுவர் பிள்ளை உலக ஆசிரியர். வேதகப் பொன்’ ஆவது பலவிதமான சித்த மருந்துகளையிட்டுப் பலகால் உருக்கிக் குளிகையாகப் பண்ணி, இரசவாதிகள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பரிசவேதி"யாகிய பொன். அதுபோலவே, இவர்களோட்டை சம்பந்தம்'

19. பூரீவச. பூஷ், 224 (புருடோத்தம நாயுடு பதிப்பு) * - * 29. பரிசவேதி - தன்னுடைய சம்பந்தத்தால் பேதிப்பது; வேறு படுத்துவது. பரிசம் - சம்பந்