பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 521

என்றது, அந்தப் பொன் தீண்டின அளவிலே இரும்பைப் பொன்னாக்குவது போலே ஆயிற்று பிறவியிலே உண் டான நைச்யம் (தாழ்வு) முதலானவற்றையுடைய சிறந்த வரான இந்தப் பாகவதர்களுடைய சம்பந்தம். தாழ்ந்த பிறவியால் (பார்ப்பனப் பிறவியால்) வந்த குற்றத்தைப் போக்கி இவனையும் (பார்ப்பனனையும்) பாகவதனாக்கி விடும் என்றபடி.

நம்மாழ்வாரும் தம்மைத் திருமாலுக்குரிய தொண் டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (திருவாய். 6. 9 : 1) என்றும், நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் - தன் அடிமை நேர்பட்ட தொண்டர் தொண் டர் தொண்டர் தொண்டர் சடகோபன் (டிெ 8, 9: 11) என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வதனாலும் பாகவதத் தொண்டே திருமந்திரத்தின் சாரமான பொருளாகும்’ என்பது தெளிவாக அறியக் கிடக்கின்றது.

2. §§5th (Means)

துன்பம் கலவாத இன்பம் எதுவோ அதுவே மோட்சம் அல்லது வீடுபேறு என்று வழங்கப் பெறும். அந்த நிலையை அவாவி நிற்பவர்கள் முமுட்சுகள். இவர்கள் முத்தி நிலையை அடையும் நெறிகள் இரு வகைப்படும். வைணவ சமயம் சித்தோபாயம், சாத்தியோபாயம் என்ற இரு நெறிகளைக் கூறும். சித்தோபாயம் என்பது நம்மால் செய்யப்பெற வேண்டியதல்லாது முன்பேயுள்ள நெறி; இறைவன். திருமங்கையாழ்வார் தள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பியோ!" (7. 2: 1) என்ற பாசுர அடியில் சித்தோபாயத்தை வெளியிடுகின்றார். இன்னொரு பாசுரத்திலும் இந்த ஆழ்வார்,

3 ميلاده... سمسم ما تسممن عدم----

தம். வேதி-பேதிப்பது. இரும்பின் கரிய நிறத்தைப் பொன்னிறமாக்குவது.