பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 பரகாலன் பைந்தமிழ்

persons) இலர் என்று கூடக் கூறலாம். நாதமுனிகள் போன்ற யோகமுறையைத் தெளிந்தவர்கள்தாம் இதற்கு அதிகாரிகளாவர்.

பிரபத்தி நெறி; இது சரணாகதி நெறியாகும், எல் லோரும் எளிதாக அநுபவிக்கக் கூடியது. சுக்கிரீவன், வீடணன், காகம் (காகாசுரன்) போன்றோர் இந்நெறி யைக் கடைப் பிடித்தே உய்ந்தவர்கள். இந்தப் பிரபத்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் பிர பந்த ஜனகூடஸ்தர் என்று வழங்குவதும் உண்டு. பிர பத்தி நெறியைக் கடைப் பிடிக்கும் வைணவர்கள் யாவருக் கும் தலைவர் என்பது இதன் பொருள். இவர் பிரபத்தி செய்தது அர்ச்சாவதாரத்திலாகும். திருமங்கையாழ். வார் கடைப்பிடித்த நெறியும் இதுவே: எல்லா ஆழ்வார் களும் இந்நெறியை ஒரே குரலாகப் போற்றுகின்றனர். நம்மாழ்வார் திருவேங்கடவனைச் சரண் புகுந்த அகல கில்லேன் (திருவாய் 6.10:10) என்று தொடங்கும் பாக ரமே சரணாகதி தத்துவத்தை விளக்கும் திருமறை போன்ற பாசுரமாகும். முதலில் 'திருவேங்கடம் அடை நெஞ்சே என்று ஒரு முறைக்கு ஒன்பது முறை கூறிய திருமங்கையாழ்வார் அந்த வேங்கடத் தெம்மானை நோக்கிப் பேசுகின்றார்.

வேய்ஏய் பூம்பொழில்சூழ்

விரை ஆர்திரு வேங்கடவா!

நாயேன் வந்தடைந்தேன்

நல்கிஆள் என்னைக் கொண்டருளே (1.9:1).

இப்படி ஒன்பது முறை பன்னிப் பன்னி உரைக்கின்றார். இது சரணாகதி தத்துவத்தை - பிரபத்தி நெறியை - விளக்க வந்த பாசுரமாகும். திருவரங்கம்பற்றிய பதிகம் ஒன்றில் (5.8)