பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 பரகாலன் பைந்தமிழ்

தேன் உடைக் கமலத் திருவினுக் கரசே

நானுடைத் தவத்தால் திருவடி

அடைந்தேன் (1.6:9)

என்று பிராட்டியாரை முன்னிட்டுச் சரணம் அடை வதைப் பாசுரத்தில் காணலாம். சரணம் அடையும் போதே கூடாவொழுக்கத்தை நினைவுறுத்தும் பாங்கில்

வம்புலாம் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர்பொருள் தாரம்என்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி

எற்றிவைத் தெரிஎழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவி

தழுவுஎன மொழிவதற் கஞ்சி நம்பினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்

நைமிசாரணியத்துள் எந்தாய் (1.6:4)

என்ற பாசுரம் அமைந்து விடுகின்றது.

பிரபத்தி செய்வோருக்கு முக்கியமாக வேண்டப் பெறு பவை ஆகிஞ்சன்னியமும் நன்னியகத்துவமும். ஆகிஞ்சன் னியம் என்பது, கன்ம ஞான பக்திகளாகின்ற மற்ற உபா யங்களில் தொடர்பற்றிருத்தல், அநன்னியகதித்துவம் என் பது, ஆன்மா பாதுகாப்பிற்கு வேறொரு காக்கும் பொருள் அற்றிருத்தல். சமதமங்களாகிற ஆன்ம குணங் களையும் பெற்றிலேன்; கன்மஞான பக்திகளாகிற அறஞ் செய்துமிலேன்' என்பதைத் திருமங்கையாழ்வார்,

நலந்தான் ஒன்றுமிலேன்

நல்லதோரறஞ் செய்துமிலேன் (19:4)

என்று கூறுவது ஆகிஞ்சன்னியம்.