பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 பரகாலன் பைந்தமிழ்

களை விதிக்கும் செயற்கையாலே, குற்றமுடையவர் கள் முன் செல்லக் கு- ல் கரிக்கும்படி இருக்கும் சர்வே சுவரனைத் தக்க வழிகளாலே குற்றங்கள் அனைத்தையும் மறைப்பித்துச் சேர்ப்பிக்குந் தன்மையள். இத்தகையவள் பாவமே செய்து பாவிகளான மக்கள் சர்வேசுவரனைப் பற்றுங்கால் புருஷகாரமாக வேண்டும்' என்பது மன வாள மாமுனிகளின் கருத்தாகும்.

இதனைப் பிள்ளை உலக ஆசிரியர்,

நீரிலே நெருப்புக் கிளருமாப் போலே, குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பிப்பது இவளுக்காக'

என்று விளக்குவர். பகவான் மிக்க அருள் நிறைந்த திருவுள்ளத்தானாக இருப்பினும், சேதநன் செய்த அளவு கடந்த குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச் சீற்றத்தை மாற்றிக்கொண்டு இவனுடைய குற்றங் களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவேயாகும்.

பிராட்டியார் உலக உயிர்கட்குத் தாயாக இருப்ப தால், இவர்களுடைய துக்கத்தைப் பொறாதவராயும் இருக்கின்றாள். பகவானுக்குப் பத்தினியாக இருப்பதால் அம்முறையில் அவனுக்கு இனிய பொருளாக இருக்கின் றார். இக் காரணத்தால் இவரே அருள் நிறைந்த புருஷ காரமாக அமைந்து விடுகின்றார். இதனால் இருவரையும் உபதேசித்தால் திருத்துகின்றார். இங்ங்னம் திருத்திச் சேர்த்து வைத்ததற்கு இவரைவிடத் தகுந்தவர் வேறொரு வர் இருத்தல் முடியாது". ரீவசன பூஷணமும் இதனை,

22. பூர்வச. பூஷ. 7இன் உரை (புருடோத்தம நாயுடு

பதிப்பு

23. முமுட்சு-27

24. முமுட்சு-128