பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரத்தின் வரலாறு 21

நற் பண்புகள்-அமைந்திருத்தல் இன்றியமையாததாகும். இந்த இலக்கணங்களை உலகத்தாருக்கு அறிவிக்கும் பொருட்டு-செயல்கள் மூலம் அறிவிக்கும் பொருட்டு (Learning by Doing) — arbG)LuQjLorror Gl-GTrrgo o filar றான் என்பதை உணர்தல் வேண்டும். இம்முறை பலர் பின்பற்றுவதற்கு வழியாகவும் அமையும்.

'சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக'

என்று இதனைச் சுருக்கமாக விளக்கும் முமுட்சுப்படி, இது மேனாட்டுக் கல்விமுறையில் குறிப்பிடப் பெறும் பல புதுமுறைகளை ஒத்திருக்கும் என்று கூறலாம்.

நன்னூலில் கூறப்பெறும் மானக்கர்-ஆசிரியர் இலக் கணங்கள் பெரும்பாலும் சமயம்சாராக் கல்விக்குப் பொருந்துவனவாகும். சமயக்கல்வியில் ஈடுபடும் சீடனி டம் சாத்திர நம்பிக்கை, அறங்களை மேற்கொள்ளும் இயல்பு, திருமாலிடம் பக்தி, ஆசாரியனிடம் அளவற்ற விசுவாசம், ஆசாரியர் மனம் உகக்கும் வண்ணம் செயலாற் றும் சாதுர்யம், ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதில் விருப்பு, தன் உடல் பொருள் ஆவி அறிவு குணங்கள் முதலியவற்றை ஆசாரியனுக்கே உரிமையாக்கும் தன்மை, புலனடக்கம் முதலிய பண்புகள் அமைந்திருத்தல் இன்றி யமிையர்த்து

திருமந்திரத்தைப் பற்றியே இந்த ஆழ்வார் தமது பாசுரங்களில் மூன்று இடங்களில் பரக்கப் பேசுகின்றார். அவற்றையும் ஈண்டுக் காட்டுவது மிகவும் பொருத்த முடைத்தாகும்.

18. முமுட்சு-6