பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 39

  • A

ஈயத்தால் ஆகாதோ?

இரும்பினால் ஆகாதோ? பூயத்தால் மிக்கதொரு

பூதத்தா லாகாதோ? நேயத்தே பித்தளை நற்

செம்புகளா லாகாதோ? மாயப்பொன் வேனுமோ

மதித்துன்னைப் பண்ணுகைக்கே?

என்று அந்தச் சிலை ஊளையிட்டுக் கொண்டு விழுகின் றது. பின்னர் அந்தச் சீடர் அப்பொற்சிலையை எடுத் துக் கொடுக்கத் திருமங்கையாழ்வார் மிக உகந்து அதை வாங்கி பங்கப் படுத்துகின்றார். நாகப் பட்டினத்திலி ருந்து இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு வரு கின்றார்.

பொழுது புலரும் சமயத்தில் திருக்கண்ணங்குடி என் னும் திவ்விய தேசத்தை அடைகின்றார். அங்கு உழுது சேறாயிருக்கும் ஒரு வயலில் அச்சிலையைப் புதைத்து வைக்கின்றனர் அவருடன் வந்தவர்கள். அருகிலிருந்த உறங்காப் புளிய மரத்தின் கீழ்த் தங்குகின்றனர். அந்த வயலுக்குரியவன் நாற்று முடிகளை எடுத்துக் கொண்டு நடுவதற்காக வயலுக்கு வருகின்றான். ஆழ்வார் அவ னைத் தடுத்து நிறுத்தி இங்கு எங்கள் பாட்டன் தேடிய வயல்' என்று வழக்கிடத் தொடங்குகின்றார். தோலா வழக்கன்தான் பக்கபலமாக இருக்கின்றானே! உழவன் திடுக்கிட்டு எதிர் வழக்கிடுகின்றான். அதற்குப் பரகாலர் நாளைக் காலையில் பத்திரம் கொண்டு வருகின்றேன்; இல்லாவிட்டால் நீ உழுது கொள்ளலாம்' என்று கூற அவனும் அதற்கு ஒப்புக்கொண்டு மீண்டுச் செல்லு கின்றான்.