பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 109 என்ற தாழிசையால் அறியலாம். பகையரசர்களுடைய தாட்டினைப் படைகள் தாக்குங்கால் அவர் ஊரி&ன எரி கொளு வியும் சூறையாடியும் அழித்தல் இயல்பாக இருத்தது. கருணு கரனின் படை கலிங்க நாட்டினை அழித்த செய்தியை, * அடையப் படர்எரி கொளுவிப் பதிகளே அழியச் சூறைகொன் பொழுதத்தே' என்று கவிஞர் கூறுவதைக் காண்க. பேசர்க்களத்தில் இருதிறத்துப் படைகள் ஒன்ருே டொன்று பொருங்கால் நால்வகைப் படையுள் ஒவ்வொரு வகைப் படையும் அவ்வகைப் படையுடனேயே போரிடுவது மரபாக இருத்து வத்தது. போர்க்கனங்களில் உலக்கை, சக்கரம், குத்தம், பகழி, கோல், வேல் முதலியவை அக்காலப் போர்க்கருவிகளாகப் பயன் பட்டனவாக அறிகின்குேம். இன்று அத்தகைய போர்க் கருவி களில் சில சென்னை, ஐதரபாத் தகர்களில் உள்ள பழம் பொருட் காட்சிகளில் வைக்கப்பெற்றுள்ளன. இரவில் போசிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கலிங்கப்போரின் மேல் சென்றபடை "உதயத்து, ஏகுந்திசை கண்டு அது மீள விழும்பொழுது ஏகல் ஒழித்து’’’ என்று கூறப்படுதலாலும், கலிங்க மன்னன் படை சூழப்பெற்றிருந்த மலைக் குவட்டைக் கதிரவன் மறையும் தேசத்தில் அணுகிய படை,

  • வேலாலும் வில்லாலும் வேலி கோலி

வெற்பதனே விடியளவும் காத்து தின்றே”* (கோலி-வளைத்து) என்று கூறப்பெறுதலாலும் இதனை அறியலாம். போர்க்களத்தில் தோற்ருேடிய அரசர் விட்டுப்போன குடை, சாமரம் முதலியவற்றை வென்ற வேந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன் பயன்படுத்துவர் என்பதனை இந்நூலால் அறிகின் ருேம். குலோத்துங்கன் காஞ்சியில் அமைக்கப்பெற்ற சித்திர மண்டபத்தில் வீற்றிருந்தபொழுது,

  • வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு தங்கள் பொற்குடை சாமரை என்றிவை

தாங்கள் தங்கரத் தாற்பணி மாறவே' (வெந்நிடுதல்-புறமுதுகிடுதல்; இடு-போர்க்களத்தில் விட்டுச் சென்ற, பணிமாற-குற்றேவல் புரிய) - - 92. தாழிசை-370. 94. தாழிசை,464. 93. தாழிசை-362. 95. தாழிசை-325.