பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 48 பரணிப் பொழிவுகள் [அஜ்லப்ப-குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலே ; இற்றஉடலினின்றும் இற்று வீழ்ந்த; தாள்-கால்கள்; அடி-பாதம்; இழுக்கும்-வழுக்கும்) உடலிலிருந்து அறுப்புண்டு நீங்கிய தோள்களைக் குருதிவெள்ளம் அ&லத்துச் செல்லுகின்றன. அறுபடாத நீண்ட குடல்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து செல்லுகின்றன. குதிரை, யானே முதலிய வற்றின் கால்களே நரிகள் இழுத்துச் செல்லுகின்றன. மூளைச் சேற்றில் வீரர்கள் வழுக்கி வீழ்கின்றனர். இக்காட்சியை மேற் காட்டிய தாழிசையில் காணலாம். ஆத்த மாயப்போரில் இன்னும் சில காட்சிகள் காட்டப் பெறுகின்றன. - -

  • தினங்கள் பார்! தினம ணங்க ணிந்தனநி

லங்கள் பார் நிலம டங்கலும் பிணங்கள் பார்! இவைகி டக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார்!' (நிணம்-கொழுப்பு: மணம்-நாற்றம் கனிந்த-முதிர்ந்த.) இறத்துபட்ட வீரர்களின் கொழுப்பும், கொழுப்பின் மணங்கமழும் இடங்களும், எங்கும் பிணமயமாக இருத்தலும் அப்போர்க்களக் காட்சியில் காணப்படுகின்றன. இத்தன்ேக்கும் மேலாக பேய் sour; 3's Guties oth” (New species of demons) #rlil-roup #á sir, அச்சச் சுவை . அச்சம் என்ற உணர்ச்சி மக்களுடைய உடன் பிறந்த சொத்து என்றே சொல்லலாம். அச்சவுணர்ச்சி இல்லாத மாந்தர்களே இல்லை என்று கூறிவிடலாம். அவரவர்கள் மனத்துணிவித் கேற்றவாறு அச்சத்தை உண்டாக்கும் நிலைக் களன்கள் வேறுபடலாம். ஆயினும், அச்சவுணர்ச்சிமட்டிலும் எல்லோரிடமும் அமைந்திருக்கும். இவ்வளவு பழக்கமான உணர்ச்சியாக இருந்தபோதிலும் அச்சத்தைக் கவிஞர்கள் இலக் தியத்திற்கு ஒரு முக்கிய சுவையாக விவரிப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், இலக்கியங்களில் அச்சச் சுவை ஆங்காங்குச் சிறப் புடன் கையாளப்பெற்றிருப்பதை நாம் அறிந்து துய்க்கலாம். குலோத்துங்கனின் படைவீரர்கள் கலிங்க நாட்டிற்குள் புகுந்து ஊர்களே எரிகொளுவிச் சூறையாடுவதைக் கண்டவுடன் SHCHCCSAggACCASACHGAAAS 40. தாழிசை-161.