பக்கம்:பரதாயணம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரன் செங்குட்டுவன் நாடகத் துவக்கத்திற்கு முன்பு குரல்: செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் தீட்டிய சிலப்பதிகாரத்திலே ஒரு பொன்னேடு!... கண்ணகி சிலை நாட்டுவதற்கு வடநாட்டிலே இருந்து கல் கொண்டு வந்த கதை ! தமிழகத்துப் பழம்பெரும் சரித்திரத்தைச் சொல்லும் வீர வரிகள்! அன்றொரு நாள்! அணிதேர்ப்புரவி ஆட்பெரும்படையோடு நாம் அரசு கட்டிலில் அமர்ந்திருந்த நாள்! அப்போது வடபுலத்திலே...கனகவிசயர் சபையில்.... தீராதிதீர தீன காட்சி -1. தீன தயாபர தெய்வீக புருஷ வேதாந்த சாகர வேந்தர்குலதிலக உத்திரதேசத்து மன்னாதிமன்னர்கள் கடவுள் அவதார கனக விஜயர் பராக்! பராக்! மன்னர்கள்: நமஸ்கார்! கனகர்: நமஸ்கார்! விஜயர்: நமஸ்கார்! கன: சுயம்வரத்துச் சுந்தரிக்காகக் கிறீர்கள் போலும் ஹி ! ஹி!.. க் காத்துக் கொண்டிருக் மன்: ஆமாம். நீங்கள் இருவருமே வந்து விட்டீர்களே! சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர் ஜெயித்துவிட்டால், அந்தப் பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது? 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரதாயணம்.pdf/43&oldid=1696323" இலிருந்து மீள்விக்கப்பட்டது