பக்கம்:பராசக்தி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் : இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானக்கா! பார் : ம்... போம்மா! போ! மாப்புள்ளே நீ சொன்ன படி யெல்லாம் கேட்கிறாரு! பையன் வந்துல்ல அடக்கணும். கல் : போங்க அக்கா டியா? மாணி: அதுக்குள்ளே பையன்னே தீர்மானம் பண்ணிட் பார் : நான் தீர்மானித்தாலும் தீர்மானிக்காவிட்டாலும் அவுங்க ரெண்டு பேருமே தீர்மானம் பண்ணிட்டாங்களாம் பையனுக்கு பன்னீர் செல்வம்னு பெயர் வைக்கிறதா ... தங் : அதுமட்டுமல்ல பெண் பிறந்தால் நாகம்மான்னு பெயர் வைக்கிறதா தீர்மானிச்சிருக்கோம். (புறப்படுகின்றனர்) மணி : என் பொண்ணு புத்திசாலிதான். இந்த சந்தோ ஷத்தைப் பார்க்க மகன்களும் இருந்தால்... காட்சி-7 (குணசேகரன் சென்னை வந்து கப்பலிலிருந்து இறங்கி காரில் ஏறி அமர்ந்திருக்கிறான்.) பிச்சை : சாமி... குண : சரிதாம்போ! தமிழ்நாட்டின் முதல் குரலே ரொம்ப நல்லா இருக்கே!...(பிச்சை கொடுக்கிறான்) மற்ற : அய்யா...பிள்ளைக் குட்டிக்காரன். குண : (கொடுத்து முடிந்தவுடன்) டிரைவர் போப்பா? (காரில் புறப்பட்ட குணசேகரன் பேங் வந்து சேருகிறான் பணங்களைப் பெரும்போது அதனைக் கண்ட வீதியிலே நட மாடும் விபச்சாரி அவனைப் பின் தொடருகிறாள் நெஞ்சிலே நஞ்சுகொண்டு. பணங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு ஹோட் டலில் தங்குகிறான். ஹோட்டல் மானேஜரிடம் டிக்கட் புக் பண்ணிவீட்டு மீண்டும் தன் அறைக்கே திரும்பி உள்ளே நுழைகிறான். அங்கே- அவனைப் பின்தொடர்ந்த ஜாலி என்ற யுவதி படுத்திருக்கிறாள். அவளைக் கண்ட அவன்...) குண : மன்னிக்கணும்! தவறி ஒங்க ரூமுக்கு வந்து விட் டேன்,எல்லா ரூமும் ஒரே மாதிரியா இருக்கிறதால் வித்தி யாசம் தெரியலே! ஜாலி : பரவாயில்லை! பரவாயில்லை ஒங்க ரூம் நெம்பர்? குண செவன்!- .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/10&oldid=1705873" இலிருந்து மீள்விக்கப்பட்டது