பக்கம்:பராசக்தி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-10- ஜாலி : செவன்...என் நெம்பர் எயிட் பக்கத்து ரூம் தவறி யவள் நான்தான் (உடனே வெளியேறுபவள் போல் பாவனை செய்கிறாள்) குண : பரவாயில்லை! பரவாயில்லை (பையன் காப்பி கொண்டு வந்து கொடுக்கிறான்) குண : காப்பி சாப்பிடுங்க... ஜாலி : உம். வேண்டாம்.. தேங்ஸ் .. குண : சும்மா சாப்பிடுங்க (கொடுக்கிறான்) ஜாலி : ம்...உங்க.. ஊரு குண : மதுரைக்குப் போகனும்! -டிரெயினை மிஸ் பண் ணிட்டேன். ஜாலி : நானும் அப்படித்தான் குண : நான் சினிமாவுக்குப் போகணும்!..டைம் ஆகுது ஜாலி : (வெறுப்புடன்) சினிமாவுக்கா சீ! அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. குண : ஏன் ஜாலி : அதைக் குளோஸ் பண்ணுவதற்கு ஒரு சங்கம் ஏற்பட்டால் அதற்கு நான்தான் தலைவியாக இருப்பேன். நம்ம நாட்டுக்கு ஏற்றது பரதநாட்டியம் டான்ஸ் இதுக்குப் போனால் எவ்வளவோ நல்லா இருக்கும் எனக்குத் தெரிஞ்ச இடத்திலே நல்ல டான்ஸ் இருக்கு வாங்க அங்கே போவோம். குண : (வியப்புடன்) நீங்களுமா? ஜாலி : ஏன் இப்படி வித்தியாசமா நினைக்கிறீங்க? உங்க தங்கையாக இருந்தால் அழைச்சிட்டு போகமாட்டீங்களா? இப்படி தப்பாக நினைக்காதீங்க. குண : சரி போவோம். காட்சி-8 (ஜாலக்காரி ஜாலியுடன் ஓர் தாசி வீட்டில் நடக்கும் நாட்டியத்தை வெறுப்புடன் ரசிக்கிறான்) ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்-அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் (ஓ ரசிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/11&oldid=1705874" இலிருந்து மீள்விக்கப்பட்டது