பக்கம்:பராசக்தி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-11- கற்சிலையும் சித்திரமும் கண்டு-அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு சிற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு- வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதீர் மதியை - தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் வானுலக மோட்சமதை நாடி-இன்ப ஓ ரசிக்கும் வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி-பெண்களின் வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி- வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப்போல நினைந்து வீணிலே அலைய வேண்டாம்- தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் (குணசேகரன் டான்ஸ் கச்சேரியில் ஜாலக்காரி ஜாலி யால் குளிர்ந்த பானத்தில் மயக்க மருந்திட்டு மயக்கப்பட்டு தன் பணத்தை பூராவும் பறிகொடுக்கிறான்) (கல்யாணி வீடு) டாக்டர்: (கல்யாணியைப் பரிசோதித்து விட்டு) அவ சரமாக இந்த மருந்தை வாங்கிக்கொண்டு வாங்க. தங்கப்பன் : (எதிரே வரும் மாமனாரைப் பார்த்து) இப்போ எப்படி இருக்கு? மாணிக்: (டாக்டர் சீட்டைக் காட்டி) அவசரமாக இந்த மருந்தை வாங்கிக்கொண்டு வாங்க. (தங்கப்பன் சைக்கிளில் வேகமாக செல்லுகிறான்) பார்வதி : (வெளியே வந்து) பேரன் பன்னீர்செல்வம் பிறந்திருக்கிறான். மாம் மாணிக்: (களிப்புடன்) மாப்பிள்ளை! மாப்பிள்ளை! (மருந்தை வாங்கிவரப் போய்க்கொண்டிருந் ந்த பிள்ளை வீட்டின் எதிரே காரில் அடிபட்டு விழுந்து இறக்கிறார். அதைக் கண்ணுற்ற மாமணார் மாணிக்கம் பிள்ளை அதிர்ச்சி யால் மரணமடைகிறார். கல்யாணி விதவையாகிறாள். காட்சி - 9 குண: அய்யோ -ஏமாந்தேன் எவ்வளவோ கஷ்டப் பட்டுக் கடல் கடந்து வந்தேன் கல்யாணி காலையிலே உன்னை காணலாம் என் அத்தானைக் காணலாம் அப்பாவைக் காண லாம் என்று ஆசை அலைமோதிக் கிடந்தேன். நெஞ்சிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/12&oldid=1705875" இலிருந்து மீள்விக்கப்பட்டது