பக்கம்:பராசக்தி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-18- சரஸ் : டாக்டர்! அவருக்கு கொஞ்சம் சொல்லுங்க. டாக் : மிஸ்டா சந்திரசேகரன் மனதைக் குழப்பிக்கிடா தீங்க அமைதியாக இருங்க. காட்சி-11 (மதுரையில் கடன்காரர்கள் மாணிக்கம் பிள்ளையின் வீட்டை ஏலமிடுகின்றனர்) விளம்பரம் : இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்; மாசிக்கோனார் தெரு, மாணிக்கம் பிள்ளையின் வீடாகிய இந்த ஆறாம் நம்பர் வீட்டை நாளை பகல் மூன்று மணிக்கு பகிரங்க ஏலத்தில் விற்கப்படும், இது கோர்ட்டார் உத்தரவு. ஒரு : டேய் தம்பி! பார்ரா இந்த பரிதாபத்தை... இரங் கூனிலே வில்லைக்கொத்து போல மூணு பிள்ளைகள் செல்வச் சிறப்போடு இருக்காங்க என்ற தைரியத்திலே இந்த அப்பாவி மாணிக்கம் பிள்ளை கடன் வாங்கி மகள் கல்யாணத்தை ஆடம் பரமாக நடத்திட்டு அந்த மனுஷனும் மண்டையைப் போட் டுட்டான். இரங்கூனில் ஜப்பான் குண்டு வீச்சிலே இந்த பசங்கள் என்ன ஆனாங்களோ? அட அதுதான் போகட்டும் இந்தப் பொண்ணு கல்யாணி கையிலே இருந்த பணம், நகை நட்டையெல்லாம் விற்றுக்கொடுத்துக்கூட ஒண்டி இருந்த வீட்டுக்கே ஆபத்து வந்திரிச்சி... இன்னும் என்ன நடக்கப் போகுதோ? காட்சி-12 (கல்யாணி கண்ணீர் சிந்திய முகத்துடன் கையிலே குழந்தையை வைத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து பாடு கிறாள்) பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்?. பாராயோ என் பன்னீர் செல்வமே ராஜாங்கம் போலே வாழ்ந்த வாழ்வும் வீழ்ந்ததே (பூமாலை சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் பாழான எந்தன் வயிற்றில் பிறந்தாய் ராஜா! நீயேன் பிறந்தாய் (பூமாலை பறவை வீட்டில் நீ பிறந்திருந்தாலும் பசி நீங்கவே உணவும் பறந்தோடி வந்திடும் கோடானு கோடி ஏழை மாந்தர் வாழும் சீமான்கள் வாழும் நாட்டில் பிறந்தாய் - ராஜா நீயேன் பிறந்தாய்? (பூமாலை (பாடல் முடிந்ததும் பார்வதி வருகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/14&oldid=1705877" இலிருந்து மீள்விக்கப்பட்டது