பக்கம்:பராசக்தி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-14- பார் : கல்யாணி எப்ப பார்த்தாலும் இப்படிக் கண் ணீரும் கம்பலையுமாக இருந்தால் என்ன ஆகும்? வேண்டியதைப் பாரு. நடக்க கல்யா : இந்தக் குழந்தையை வளர்க்க யாராவது முன் வந்தால் நடக்க வேண்டியது தானாக நடக்கும். பார் : குழந்தை என்ன செய்யும் பாவம்... கல் : அக்கா குழந்தை ஒண்ணும் பாவமில்லை! இந்தக் குழந்தையை வறுமையிலே வளர்க்க முடியாததுதான் பெரிய பாவம். பார் : கல்யாணி! நான் சொல்வதைக் கேளு. ஊர்க் கோடியிலே எங்களுக்கு இருக்கும் காலி மனையிலே ஒரு வீடு ஒண்ணு கட்டிக்கோ ஒரு சாதாரண இட்லி கடை வைத்தால் வயிறு வளர்க்க முடியாமலா போகும்? கல்: ஆ! இட்லிக் கடையா? பார் : தமிழ் நாட்டிலே தாலி அறுத்தவர்க்கெல்லாம் அது தானே தாசில் உத்யோகம். காட்சி-19 (மார்வாடிக் கடை) (சென்னையில் பணத்தை இழந்ததால் மதுரை செல்லப் வணத்திற்காகக் கஷ்டப்படுகிறான் குணசேகரன்) வியாபாரி : வாங்கோயா... நிம்மிக்கி என்னா வேணும்? சொல்லுங்கோயா? குண : அய்யா...எனக்கு ஒண்ணும் வேண்டாம் இந்த பேண்டை விலைக்கு எடுத்துக்கிடறீங்களா? வியா : இது ரொம்ப புராணா இருக்காங்க! எட்டு அணா தர்றாங்க. குண : புதுசய்யா! ஐம்பது ரூபாய் போட்டு தைச்சேன் மதுரைக்குப் போகணும் ரயில் சார்ஜுக்காவது கொடுங்கையா. வியா : நீம்பள் - பம்பாய் போறான் - மதறாஸ் போறான் நம்பள்கி என்னய்யா. எட்டணா தர்றான் (குணசேகரன் நகருகிறான். ஒரு வீட்டில் போய் பணம் கேட்கிறான்) குண : அய்யோ! கப்பல்லே வந்தேன்- பணம் பெட்டி எல்லாம் திருட்டுப் போயிடுச்சி. வீட்டுக் : பணம் பெட்டியெல்லாம் திருட்டுப் போயிட்டா போலீஸ் ஸ்டேஷனிலே ரிப்போர்ட் பண்ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/15&oldid=1705878" இலிருந்து மீள்விக்கப்பட்டது