பக்கம்:பராசக்தி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-15- குண : மதுரைக்குப் போகணும் ஏதாவது... வீட்டுக்: போ...போ.. (இரவு நேரம் குணசேகரன் ஒரு திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கிறான், வீட்டுக்காரன் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறான் குணசேகரன் மீது) வீட்டு : ஏண்டா அயோக்கியப் பயலே! யாரைக் கேட் டுடா இங்கே வந்து படுத்தே? குண : அய்யா...இன்னும் கொஞ்சம் தண்ணி இருந்தா கொண்டு வந்து ஊத்துங்க! குளிச்சு ரொம்ப நாளாகுது கொஞ்சம் சோப்பு இருக்குங்களா? வீட்டுக்: அட திருட்டுப் பயலே-(மனைவியிடம்) பாத் தியாடி இவன் திமிரை? குண : அம்மா லட்சுமி மாதிரி இருக்கீங்க! உங்க தம்பி யாக இருந்தால் இப்படி பார்த்துக்கிட்டு இருப்பீங்களா? பெண் : பார்த்தீங்களா! தம்பி முறையில்லா கொண் டாட வந்துட்டான் தடிப்பயல்! வீட்டுக் : கொண்டாடுவான் இன்னும் கொஞ்சம் கழிச்சா ஒவ்வொரு முறையும் கொண்டாட ஆரம்பிச்சுடுவான். நீ முதல்லே போயிடு உள்ளே (உள்ளே போகிறாள்) குணசேக ரனைப் பார்த்து போடா போடான்னா... குணசேகரன் போய் ஒரு பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான்) போலீஸ் : டேய் டேய் டேய் சோம்பேறி பிக்பாக்கட் அடிச்சிட்டு வந்துதானே படுத்திருக்கே என்னடா முழிக்கிறே குண : தூங்கிறவனை என்ன பண்ணுவான்? எழுப்பினால் முழிக்காம வேற போலீஸ் : டேய்! நீ பிக்பாக்கட் தானே? குண: (இரண்டு பைகளிலும் கையை விட்டுத் தடவி) இல்லை யெம்டி பாக்கட் போலீஸ்: பின்ன ஏண்டா இங்கே வந்து படுத்தே? குண : இங்கக்கூட படுக்கக் கூடாதா? மாடு செய்த புண்ணியம்கூட இந்த மனிதன் செய்யலையா? ஆமா! மதற ஸிலே மனுஷன் மிருகமாத்தான் இருக்கான் போலீஸ் யாரையடா சொல்றே? குண : உங்களைச் சொல்லலிங்க முதுகெலும்பு ஒடிய ஓடிய மூட்டை வண்டி இழுக்கிறானே... குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்கத்தெறிக்க ரிக்ஷா இழுத்துக் கூனிப்போயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/16&oldid=1705879" இலிருந்து மீள்விக்கப்பட்டது