பக்கம்:பராசக்தி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_17_ கல் : அண்ணா! நீங்க தரவேண்டாம். வேணு : பரவாயில்லை! போயி இட்லி கொண்டு வா! (கல்யாணி இட்லி கொண்டுவரப் போகிருள்) மைனர் : தனியா இருக்கிற பொண்ணுகிட்டே வந்து இப்படியா கலாட்டா பண்றது வெட்கங்கெட்ட நாய்ங்க! வேணு : ஏன் கல்யாணி இந்த மாதிரி தரந்தெரியா தவன்கிட்டேயெல்லாம் ஏன் கடன் வாங்குகிறே? கல் : என்ன கணுமே. செய்யுறது அண்ணா? வயிறு வளர்க் வேணு : அப்படின்னா நான் சொல்றபடி செய்-இப்ப நான் கொடுத்தேன் பாரு பத்து ரூபாய் அதை ரூபாயா தர வேண்டாம். தினம் காலையிலே ரெண்டு ஆளுக்கு இட்லி கொடுத்திடு. நான் இராத்திரியிலே பலகாரம்தான் சாப்பிட்ற வழக்கம் அதனாலே தினம் இராத்திரியிலே நாலு அணுவுக்கு கொடுத்திடு இந்த பத்து ரூபாய் கழிந்தப்புறம் சொல்லு. அப் புறம் போகப் போக உள் நாணயத்தைப் பார்த்து வேண்டிய பணம் தர்றேன். மைனர் : ஆமாம் பா! இந்த மாதிரி தானப்பா உதவி செய்யணும். காட்சி -15- ஏழைகளுக்குத் (சென்னையில் பசியால் துடித்து பைத்தியம்போல் ஒரு பிளாட்பாரத்தில் குணசேகரன் இருக்கிறான்) பழக் : பழம்... பழம்... ஆரஞ்சு... ஆப்பிள்.. பழம் ஏம்பா பழம் வேணுமா? குண : வேண்டாம்மா! காசு இல்லை. பழக் : காசு இல்லையா? அப்படின்னா இந்தாபாரு இதைப் பார்த்துக்கோ! போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன். (பழக்கூடையை வைத்துவிட்டு போகிறாள். குணசேகரன் பழக்காரியை கேளாமலேயே பழத்தை எடுத்துச் சாப்பிடு கிறான். பழக் : டேய்! டேய்-ஏண்டா என் பழத்தை எடுத்தே? குண : பசிக் கொடுமையம்மர்? திருடியா பழக் : பசிக்குதுன்னா பாழாய் போனவனே... நான் பாடுபட்டு பங்கப்பட்டு நாலு திங்கச்சொல்லுது தெரு சுத்தி நாலு காசு சம்பாதிக்க அதைப் பறிக்க வந்துட் டியா? குண : உன் மகனா இருந்தா மன்னிக்க மாட்டியா பரா-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/18&oldid=1705881" இலிருந்து மீள்விக்கப்பட்டது