பக்கம்:பராசக்தி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-18- பழக் : உன்னைத் தெய்வந்தாண்டா கேக்கணும். குண : அவன் கேட்கலையம்மா என் வேதனைக் குரலை, அவன் மனசுதான் கல்லாய் போச்சே. பழக் : என் பழம் எல்லாம் மண்ணாப் போச்சே! உனக்கு எந்த மாரியம்மன் கோயில் மண்ணைவாரி இறைப்பேன்? டேய் மரியாதையா பணத்தை எடுத்து வைக்கலே பல்ல உடைச் சிடுவேன். குண : பணத்துக்கு எங்கேயம்மாபோவேன். வேணும்னா கூலி இல்லாமல் இந்தப் பழத்தை சுமந்து வித்துத்தாறேன். பழக் : வித்தாத்தாரே வீணாப்போனவனே? மூஞ்சைப் பாரு அட பழத்தைத் தின்னுட்டு தோலை உரிச்சு அதிலேயே போட்டிருக்கே? தூக்கு அடே தூக்கடா! (இந்நேரம் ஒருபைத்தியக்காரன் வந்து பழக்கூடையைத் தட்டிவிட்டு பழத்தை எடுத்து ஓடுகிறான், போலீஸ் அவனை விரட்டுகிறது. ஆனால் அவனோ போலீசை மிரட்டிவிட்டுச் செல் கிறான். இக் காட்சியைக் கண்ட குணசேகன்) குண : பைத்தியக்கார உலகம், இந்த உலகத்தில் ஏமாற்றித் திரிபவன்தான் பிழைக்க முடியுமா நான் திருடியது வேட்டி வாங்கிக் கொள்வதற்கா? அல்லது வீடு கட்டிக் கொள் வதற்கா? வயிற்றுப்பசி தாங்கமாட்டாமல் ஒரு பழம் திருடி னேன்... அதற்கு பரிசு அடி, உதை, திட்டு பைத்தியக்காரன் ஒரு சீப்பு பழத்தைத் திருடுகிறான். உலகம் அவனுக்குப் பயப் படுகிறது. அவனை மன்னித்து விடுகிறது. இனி நாமும் வேறு வழியைக் கையாண்டால்தான் பிழைக்க முடியும். (இந்நேரம் ரோட்டில் ஒரு பெண் செல்லுகிறாள். இரு மைனர்கள் அவள் செல்லும் அழகைப் பார்த்து) மைனர் : இவள் நடையே தனி மாதிரி உருப்படி நமக்குப் கிடைக்கணுமே! அழகு. சார்! இந்த வந்த ; எல்லாம் பணம் போட்டால் கிடைக்கும் சார்... (குணசேகரன் மைனர்களை அடித்து) குண : சிகரெட்... (மைனர்கள் கொடுத்து விடுகின்றனர்) ஹ... ஹ.ஸக்ஸஸ் (இன்று முதல் நானும் ஒரு ஏமாத்துக் காரன்.) (பைத்தியக்காரன் மூலம் ஏமாத்துக்காரனே பிழைக்க முடியும் என்றபட்டம் பயின்ற குணசேகரன் தானும் ஓர் பைத் தியம் போல் நடித்து ஆடிப்பாடி பலரிடம்பணம் பறிக்கிறான்.) தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லா தடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/19&oldid=1705882" இலிருந்து மீள்விக்கப்பட்டது