பக்கம்:பராசக்தி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-19- ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே- குதம்பாய் காசுக்குப் பின்னாலே காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட்டு ஏறாதடி பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி நல்லவரானாலும் இல்லாதவனை நாடு மதிக்காது - குதம்பாய் நாடு மதிக்காது கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணமடியே - குதம்பாய் வெள்ளிப் பணமடியே ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே- காசுக் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே உள்ளே பகைவையடா தாண்டவக்கோனே- காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே முட்டாபயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே - காசு கட்டி அழும்போது தாண்டவக்கோனே- பிணத்தைக் கட்டி அழும்போது தாண்டவக்கோனே- பணப் பெட்டிமேலே கண்வையடா தாண்டவக்கோனே காட்சி-18 (குணசேகரன் பைத்தியக்காரன்போல் நடித்து சென்னை யிலிருந்து மதுரையில் தன் வீட்டுக்கு அருகே வந்து சேரு கிறான். அவ்வீடு பூட்டி இருப்பதால் பக்கத்தில் பிச்சை போட்டுக்கொண்டு நின்ற பார்வதியை விசாரிக்கிறான்) பார் : அட ! நீ யாரையா இரு வர்றேன் குண : இல்லேம்மா, நான் பிச்சைக்காரனில்லை பக்கத்து வீட்டிலே மாணிக்கம் பிள்ளைன்னு ஒருத்தர்இருந்தாரே, இப்ப அவரு எங்கம்மா இருக்காரு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/20&oldid=1705883" இலிருந்து மீள்விக்கப்பட்டது