பக்கம்:பராசக்தி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-20- பார் : யாரு! கல்யாணி அவுங்க அப்பா தானே? குண : ஆமாம்மா! பார் : அவரு செத்துப் போயிட்டாரு. குண: ஆ... செத்துப் போயிட்டாரா? அப்ப அவரு பொண்ணு கல்யாணி? பார் : கல்யாணி! எனக்கும் பொண்ணு?' மாதிரிதான்! கடைஞ்செடுத்த சிலைமாதிரி இருப்பாள் கல்யாணம் எல்லாம் நல்லாதான் நடந்திச்சி. பாழும் தெய்வம் அவளையும் வாழ விடலே... கல்யாணம் நடந்த மறுவருஷம் அவளை சிசுவும் கையுமா விதவையாக்கிருச்சி! குண : ஆ அய்யய்யோ...இப்ப கல்யாணி எங்கம்மா? பார் : அதோ அந்தத் தெருக்கோடியிலே இட்லி கடை வச்சிருக்கு. இப்படித் துயரப்படுறியே நீ யாரு? குண : நான் யாருன்னு சொன்னால் உங்களுக்குத் தெரி யாதம்மா. (கல்யாணியைத் தேடி தெருக்கோடி வீட்டுக்கு செல் கிறான் குணசேகரன்) காட்சி-17 (கல்யாணி தன் குழந்தையை தொட்டிலில் போட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாள் இதைப் பார்த்துக்கொண்டே கண்கள் கடலாக நெஞ்சைத் துளைக்கும் சோகத்தோடு நிற் கிறான் குணசேகரன்) கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே - செழும் கோமளத் தாமரைப் பூவே - ஒரு வஞ்சமிலா முழுமதியே இன்ப வானில் உதித்த நல்லமுதே! கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ மாமன்மார் மூவர் தம்பி - நல்ல வாழ்வளிக்க வருவார் உன் மாம்பழக் கன்னத்தில் - முத்த மாரி பொழிந்திட வருவார் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ மாணிக்கப் பாலாடை-பச்சை மாமணித் தொட்டிலுடன்--வெள்ளை யானையும் வாகனமாய்- சின்ன மாமன் தருவார் சீதனமாய் கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/21&oldid=1705884" இலிருந்து மீள்விக்கப்பட்டது