பக்கம்:பராசக்தி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-22- வேணு: எய் - அங்கே வர்றியா போவோம்... 1வது: எங்கே? (மைனர் வேணுவால் அழைத்துச் செல்லப்படுகிறான்) காட்சி 19 [பைத்தியம்போல் வேணுமென்றே பிதற்றிக் கொண்டி ருக்கிறான்) குண : கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்... குடிக்கத்தான் கற்பித்தானா? (சிரிக்கிறான் நானே மகாராஜன் இல்லை சந்தேகம் - யாரவர்கள், மந்திரி பிரதானிகளே வருக இவ்வாசனத்தில் அமருங்கள்! பரத நாட்டியம் ஆரம்ப் மாகட்டும் டுமீர் டுமீர் டுமீர்! கோபாலனோடு நான் ஆடுவேனே - நந்த கோபாலனோடு நான் ஆடுவேனே - வேணு கோபாலன் - ஆ நந்தகோபாலன் - ஊ நந்த இசைக்குயில் போல ஆடுவேனே கோபாலன் ஐயோ! ஐயோ! போதும் போதும்! தேச விசாரணை ஆரம்பமாகட்டும் டும் டும் டும்! மந்திரி நமது மா நகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? டுமீர்! டுமீர்! அதுக்குத் தான் வருண பகவானுக்கு ‘கடக்கட்டு' கட்டி தந்தி அடிச் சிருக்கோம் மகராஜ்! சபாஷ் சபாஷ்! யார் அவர்கள்? ஏன் கத்துகிறார்கள்? ஓய் ஓய் மகாராஜா வயிறு பசி தாங்கல்லே -குடும்பம் குடும்பமாக சாகிறோம். வாட் வசிக்குதா? அப் படிச் சொல்லாதே பாவி! பவுன் விளையுற நாடுடா! பரதேசிப் பசங்களா பட்டினி கிடக்கிறீங்களா? சாவுங்க சந்தோஷமாக சாவுங்க! அப்பத்தாண்டா வால் நட்சத்திரம் கிளம்பும். சர்- சர்- மகராஜ் பணம் இல்லையா? வேர் யு ஆர் ! வேறே வாட் யு வாண்ட்? வடமலையானுக்கு காவடி எடுங்கடா-வடமலை யானுக்கு...(ஒரு செங்கல்லை எடுத்து) அரோகரா சர்வராம சஞ்சீவி நாம பர்வதம் ராம சங்கீர்த்தனம்... கோவிந்தா... ஹரே கோவிந்தா! (கல்லை சுமைதாங்கி மீது வைத்துக்கொண்டு) நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில் -சுட்ட சட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/23&oldid=1705886" இலிருந்து மீள்விக்கப்பட்டது