பக்கம்:பராசக்தி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23- பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பட்டினிகிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பஜனை செய்வோம் கண்ணன் நாமம்-பட்டினி கிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் (இவ்வாறாக பைத்தியக்காரனைப் போல் பல வேஷத்தில் பல பேச்சுக்களை பேசும் குணசேகரனைக் கண்ட கல்யாணி) கல்யாணி: அய்யோ- பாவம்- யாரோ போல்இருக்கு. பைத்தியம் - குண: தங்கச்சி தங்கச்சி இங்கே வாயேன். கல்யா: என்ன? அப்பா நான் உனக்கு தங்கச்சியா? குண: ஆமா! நான் உன்கிட்டே ரெண்டு மூணு நாளா ஒண்ணு சொல்லலாம்னு நினைச்சேன். கல்: என்ன? குண : ஒண்ணுமில்லே நான் ஒரு பொண்ணு பெத்து தர்றேன் உன் பையனுக்கு கட்டிக்கிறாயா? கல் : அது சரி சீதனம்? குண: அது அப்புறம் பார்த்துக்கிடலாம் முதல்லே என் மாப்பிள்ளையை கொஞ்சம் கொடு - ஒரு முத்தம் கொடுத்துட்டு தர்றேன். கல் :அய்யோ - நான் மாட்டேன். குண : தங்கச்சி ஒண்ணே ஒண்ணும் தரமாட்டியா? தங்கச்சி சத்தியமா- நான் பைத்தியக்காரனில்லே உன் பிள்ளையை ஒண்ணும் செய்யல்லே கொடுக்கமாட்டியா? ஆம் நான் பைத்தியக்காரன்தான் (தாளா துயரத்தோடு சென்று விடுகிறான்) காட்சி 20 (இடம் ரோடு) லியா வடை! முறுக்கு! அய்யா! முறுக்கு வேணுமா? குண : மூணு அணாவுக்கு கொடு வியா : அட கடவுளே! போணி ஆயி மூணு நாள் ஆகுது வடை எவ்வளவுக்கு முறுக்கு எவ்வளவுக்கு? குண : அட ரெண்டு அணாவுக்கு இதுவும் ஓரணாவுக்கு அதுவும் கொடப்பா! (கொடுக்கிறான்) வியா : ஏம்பா உன் கை நல்லா நடக்கும்லே? குண : கை நடக்காது- கால் நடக்கும் (என்று செய்கை மூலம் காட்டுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/24&oldid=1705887" இலிருந்து மீள்விக்கப்பட்டது