பக்கம்:பராசக்தி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-25- அட பாவி முத : ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்கா? குண : சில்லறையா? எங்கிட்டேயா? கொண்டா. (ரூபாயை வாங்கி கையில் வைத்துக்கொண்டு) நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ- ஏதுங்காணும் இந்தக் காசு? முத ஏதுங் காணும் இந்தக் காசா? குண : டேய் ‘எய்ட் நாட்தி" கொண்டு இந்தக் கொட்டாபுளியை [ரூபாயுடன் ஓடி விடுகிறான்) முத : சரிதான் பெட்டி இருக்குதல்ல போடா [வியாபாரி வந்து பெட்டியைத் தூக்குதல்.. முதலாளி தூக்கவிட மறுத்தல். வியாபாரி பெட்டியைத் தூக்கி முதலாளியின் தலையின்மீது வைத்தவுடன் போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போதல்] காட்சி 21 [காமவெறி பிடித்த கருநாகம் வேணு, கல்யாணி என்ற கனியைச் சுவைக்கும் நோக்கத்தோடு கல்யாணியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.) வேணு : கல்யாணி கல்: [கதவைத் திறந்தவுடன்] நாழி? இனிமேல் சீக்கிரமா வந்துடுங்க. எண்ணா இவ்வளவு வேணு : வரவேண்டிய நேரத்திலேதானே வந்திருக் கேன் ஏன் கல்யாணி இன்று வியாபாரம் எப்படி? கல் : என்றைக்கும் போலத்தான் இன்னிக்கும் வேணு : ம்... இட்லி இருக்குல்லே? கல்: இருங்கண்ணா! கொண்டு வர்றேன் வேணு : என் கல்யாணி! அரிசி கிடைக்காத நேரத் திலே இப்படி தனி அரிசியாய் போடாமல் கோதுமையைச் சேர்த்தால்- கல் : சேர்க்கலாம் ஆனா ருசி கெட்டுடும் கொஞ்சம் வேணு: எதுவும் தனிமையாக இருக்கிறதைவிட இரண் டாக இருந்தால் நல்லா இருக்கும். கோதுமையும் கலந்துகிட் டால் லாபமும் அதிகம் இருக்குமே! கல் : லாபத்துக்காக அக்கிரமம் செய்யலாமா அண்ணா? வேணு : என்னடி மூச்சிக்கு முப்பத்திரண்டு அண்ணா போட்ற? கல்: அண்ணா! எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உண்டு அவர்களில் ஒருவரைக்கூடப் பார்க்க கொடுத்து வைக்காத பாவியானேன்! ஆசைக்கு உங்களையாவது அண்ணா அண்ணான்னு கூப்பிட்றேன் வணுே : அட பைத்தியமே ஆசை அதிகமாயிட்டா அதுக்கு அண்ணான்னு கூப்பிட்றது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/26&oldid=1705889" இலிருந்து மீள்விக்கப்பட்டது