பக்கம்:பராசக்தி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-26- கல்: அண்ணா! உங்கள் பேச்சில் விபரீதமிருக்கிறதே? வேணு : ஆசையைக் காட்டிக்கொள்ளும் வல்ல கல்யாணி! கல் : அண்ணா வழி அது தனியாக இருக்கும் பெண்களிடம் இருக்கக் இப்படிப் பேசுவது- வேணு : ஆமா! தளிர்க்கொடி தனியாக கூடாதுன்னுதான் படர்வதற்கேற்ற பலாமரமாக நான் இருக் கிறேன். மாமான்னு கூப்பிடு! அது எவ்வளவு மனோகரமான வார்த்தை! அத்தான்னு கூப்பிடு அது எத்தனை சத்தான மொழி. கல் : நிறுத்து இனி என்னால் பொறுக்க முடியாது. வேணு: இங்கே என்ன வாழுதாம்! நானும் அப்படித் தான் நீ சரின்னு சொல்லு. ஓலைக்குடிசை இருக்கும் இடத் திலே உப்பரிகை கட்டித் தருகிறேன். கந்தல்பாயிலே படுத்த கல்யாணி கனகமணிக் கட்டிலிலே படுப்பாள். கல் : சீ நெருங்காதீர்கள்! வறுமையால் வாடும் பெண் கள் வஞ்சக வலைவீசினால் விழுவரர்கள் என்று எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்? இப்படி வேணு : போர்க்களத்திலே ஒப்பாரி! போகக் களத்திலே புலம்பல் கோழைகள் செயலடி என் கோமள நாயகி கல்: என்னைத் தொட முயன்றால் சப்தம் போடுவேன் வேணு : போடு! உன் சப்தம் எனக்கு சங்கீதமாக இருக் கட்டும். [என்று கல்யாணியைக் கட்டி அணைத்து அவள் செவ் விதழைச் சுவைக்கப் போகிறான், காம வெறியன் கயவன் வேணு, இந்நேரம் குணசேகரன் வந்து...) குண : மரியாதை வேண்டாமடா, மைத்துனா (என்று வேணுவை அடித்து விரட்டுகிறான்) கல் 2 நீ வரலின்னா என்கதி என்ன ஆகியிருக்கும்! கிறுக் கண்ணா நீ எங்கே இங்கு வந்தே குண : உன்னைப் பார்க்கத்தான் கல்: கிறுக்கண்ணா பத்துநாளா அந்த மரத்தடியிலே என்ன செய்யுறே! குண : ராஜாங்கம் நடத்துறேன் கல் : கிறுக்கண்ணா இட்லி தர்றேன் திங்கிறியா? குண : ம்... நீ காசு கேட்பியே கல்: காசு வேண்டாம் குண: நான் யாருன்னு சொன்னா நீ மாட்டே கல்: நீ யாரு? குண : நானு... நானு மரத்தடி மகாராஜா! காசே கேட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/27&oldid=1705890" இலிருந்து மீள்விக்கப்பட்டது