பக்கம்:பராசக்தி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-27- கல் : இட்லி கொண்டு வர்றேன் குண : வேண்டாம்... வேண்டாமம்மா... இட்லி வேண் டாம்மா...சட்னி வேண்டுமம்மா... கல் : சரி ரெண்டும் கொண்டு வர்றேன் (போகிறாள்) (குணசேகரன் பின்னால் சென்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மாப்பிள்ளைக்கு முத்தமிடுகிறான் அவன் கண்களில் கண்ணீர்) கல் : (இட்லியுடன்) ஏன் கிறுக்கண்ணா அழறே . குண உம் என் ராஜங்க பிரஜையெல்லாம் சந்தோ ஷமாக இருக்காங்க.. அதனாலே நான் அழறேன். (என்று தன் கையிலிருந்த ரூபாயை இட்லித் தட்டில் போட்டு விட்டுப் போய்விடுகிருன்) கல்! கிறுக்கண்ணா! கிறுக்கண்ணா காட்சி-22 மறுநாள் காலை மைனர்கள் சிலர் கடையொன்றின் முன் நின்று அரட்டை அடிக்கின்றனர். அவர்களுக்கு அருகில் குண சேகரன் பல் துலக்கிக்கொண்டிருக்கிறான். அப்போது 1- வது ; எங்கடா இராத்திரியெல்லாம் ஆளையே காணோம். 2-வது : இராத்திரியெல்லாம் ஒரே சீட்டாட்டம் கண் ணெல்லாம் எரியுது! 1-வது : அட் கண்ணுதான் எரிஞ்சுது! காசாவது கிடைச்சுதா?இம்...அதுதானே இல்லை. 2-வது : எங்கடா வேணுவை? ஆளையே காணோம். 1-வது ஆள் மஞ்சமெத்தையிலே படுக்க போயிருச்சி அவதான் இட்லிகாரி கல்யாணி இல்லே! அவள் கிட்டே நம் மப்பயல் வாலை ஆட்டியிருக்கான்...பாச்சா பலிக்கலே... நல்ல அடி கொன்னுட்டான் பாவம். ஏண்டா 1-வது: டேய் சும்மா இருடா! நீ வேற ஓடம்பை வீணா அலட்டிக்கிட்றே? எவனோ பைத்தியக்கார வேசத்திலே திரியுறானாம் கல்யாணிக்குக் கள்ளப்புருஷனாம்... (இதைக் கேட்ட குணசேகரன் ஆத்திரத்துடன்) குண: (மைனர்களை அடித்து) என்ன சொன்னே, கல்யாணிக்கா களங்கம்? கல்யாணி என் தங்கையடா என் தங்கை! இப்போதேபோகிறேன் நான் யாரென்பதை சொல்லி விடுகிறேன். (தங்கை வீட்டை நோக்கி வெறிகொண்டு ஓடுகிறான்) என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/28&oldid=1705891" இலிருந்து மீள்விக்கப்பட்டது