பக்கம்:பராசக்தி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-28- (குடிசையில் கல்யாணியைக் காணாமல்) குண : சந்தர்ப்பம் என் தங்கையை விதவையாக்கியது சமுதாயம் அவளை வாழவிடவில்லை (கல்யாணியைக் காணாது திரும்புகிறான் வரும் வழியில்) குண : அய்யா இந்தப் பக்கம் ஒரு குழந்தையோட ஒரு விதவை... வழிப் : அடே அது உனக்கு தெரிஞ்ச பொண்ணு தானா? அதோ அந்தக் கூட்டத்திலே போயி பாரு தற்கொலை பண் ணிக்கிட்டாங்க. குண : ஆ-கல்யாணி, (அங்கே செத்துக் கிடக்கும் பெண் கல்யாணி அல்ல என்பதை அறிந்து திரும்புகிறான்) (கல்யாணி மதுரையில் இட்லி வியாபாரத்தை விட்டு ஊரை விட்டே வெளியேறுகிறாள்) காட்தி-24 (இரங்கூனிலிருந்து வெளியேறிய சந்திரசேகர் திருச்சி யில் எம். சி. சேகர் என்ற பெயருடன் நீதிபதியாக இருக்கிறார்) வந் : ஏதாவது தகவல் கிடைத்ததா? ஒரு : ஒரு தகவலும் கிடைக்கல்ல! வந் : ஆமாம் நீங்க இந்த ஊருக்கு வந்தது அவர்களுக் குத் தெரியுமா? சந் : தெரியாது! சரஸ் : எதற்கும் நாம் நேரிலேயே பார்த்துவிட்டா? சந் : ஆம் அதற்காகத்தான் அவர்களை வரச்சொன் னேன் நாளைக்கே புறப்படுவோம். காட்சி-25- கள்ள மார்க்கெட் கயவன் நாராயணப்பிள்ளை பதுக்கி வைத்திருந்தவற்றைக் கணக்கிடல்] நாரா : சர்க்கரை மூட்டை, இருபது, மில் துணி பீஸ் முப்பது, நூல் பேல் ஆறு, ஆக மொத்தம். கருப் : அம்பத்தாறு நாரா : சீ மடையா அதுதெரியாது எனக்கு! லாபத்தைக் கணக்குப் பண்ணினால், ஜம்பத்தாறாம் கருப் : லாபம் என்னங்க, இப்பவே வித்தால்கூட முப்ப தாயிரம் கிடைக்குங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/29&oldid=1705892" இலிருந்து மீள்விக்கப்பட்டது