பக்கம்:பராசக்தி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-29- நாரா: ஏன் அப்புறம் வித்தால் ஆகாதோ? இது ஒண் ணும் கத்தரிக்கா இல்லேடா அழுகிப்போகறதுக்கு கன்னிப் பொண்ணு. காந் : கன்னிப்பெண்ணைக்கூட விக்க ஆரம்பிச்சுட்டீங் களா? கருப்: விக்கலாம் அம்மா! ஆனால் அதை இந்த மாதிரி மூட்டையாக கட்டிப்போட முடியாதே. நாரா : சும்மா இருடா மடையா. காந் : ஏன்... இவரு ப்ளாக் மார்க்கட்னா பூதத்தைக்கூட மூட்டையாகக் கட்டிப் போட்டுருவாரே. நாரா : அப்படிக் கட்டிப் போடாமலா உன் கழுத்திலே தாலியைக் கட்டினேன்! நீ ப்ளாக் மார்க்கட்ன கேவலமா பேசறே எல்லாம் பணம்தான். ஒளவையார் கூழுக்குப் பாடி னாள், கம்பர் பொன்னுக்குப் பாடினாரு, இதுவும் ப்ளாக் இல்லா மல் வேறு என்ன? இந்நேரம் தமிழ்ப் பண்டிதர் வருதல்) நாரா என்ன தமிழ்ப் பண்டிதரே. சி.ஐ.டி. நாராயணப்பிள்ளைவாள் நான் இப்பொழுது தமிழ்ப் பண்டிதரல்ல. துப்பறியும் இலாகாவில் பணியாற்று கிறேன். உங்களிடம் நிறைய நூல் இருப்பதாக கேள்விப்பட் டேன். நாரா : அரகரா, அது யாருங்க சொன்னது? என்னண்ட நூல் இருக்கிறதா. நான் ஒரு நாணயமான வியாபாரி ஊருக்கு பெரிய மனுஷன்! சன்மார்க்க சங்கத்துக்கு தலைவன். கருப்: திருட்டுப் பயல்க! நாரா : யாருடா திருட்டுப் பயல்க? கருப் : முதலாளி கிணற்றுக் கரையிலே நாலு அணாவைச் வச்சிருந்தேன். எவனோ அடிச்சிட்டுப் போயிட்டான். நாரா: போடா மடையா. சி.ஐ.டி. அமைதி அமைதி, நாராயணப் பிள்ளைவாள் நான் குறிப்பிடுவது ஆடை நெய்யும் நூல் அல்ல; அறிவு வாடை வீசும் நூல், புத்தகம். . நாரா : புத்தகமா? சரிதான் சி.ஐ.டி. சார்! எங்கிட்ட ஏராளமான புத்தகம் இருக்கு! டேய் கருப்பா அய்யா கேக்குற புத்தகத்தையெல்லாம் போயி கடையிலே வாங்கிக் கொண்டு வந்து கொடு தெரிஞ்சுதா? அப்போ புறப்படுங்கோ நேரம் ஆகுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/30&oldid=1705893" இலிருந்து மீள்விக்கப்பட்டது