பக்கம்:பராசக்தி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-30- சி.ஐ.டி. : நன்றி வணக்கம் நாரா : சந்தோஷம் (இந்நேரம் மதுரையை விட்டு வெளியேறிய கல்யாணி திருச்சிக்கு வந்து நாராயண பிள்ளையின் வீட்டு வாசலருகே பசியால் துடித்து நிற்கிறாள்) கல் : ஐயா நானும் குழந்தையும் பட்டினி ஏதாவது நாரா : ஏம்மா இந்த இளம் வயதிலேயே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டியே நீ யாரு?' கல் : நான் ஒரு அனாதையா ஏதாவது ஒரு வீட்டுவேலை கிடைச்சாலும் போதும். நாரா : அப்போ இங்கே வேலை பாக்குறியா? கல் : தயாராய் இருக்கேனய்யா தாரா : டேய் கருப்பா உள்ளே கூட்டிக்கிட்டு வாடா காட்சி-26 (மதுரையில் கல்யாணியைக் காணாமல் திருச்சி வந்து சேரும் குணசேகரன் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் இருக் கிறான். அச்சமயம் ரெயிலில் வந்த விமலா என்ற பெண்ணின் சாமான்களைக் கூலிக்குத் தூக்கி வருவதாக எடுத்துக்கொண்டு ஓடுகிறான். சிலர் அவனை துரத்தவே ஆகாரத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஓடுகிறான். (தன் பசியின் கொடுமையை அகற்ற) (ஆகாரத்தை திருடி வந்தவன் விமலா வீட்டின் கொல் லைப்புறத் தோட்டத்தின் கிணற்றங்கரையில் அமர்ந்து ஆகா ரத்தைச் சாப்பிட்டுக் கொண்டே பாடுகிறான்) கா-கா-கா-கா- ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க-காக்கை அண்ணாவே நீங்கள் அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க- கா கா என ஒண்ணாகக் கூடுறீங்க -வாங்க சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க-ஜனம் கூப்பாடுபோட்டு மனம் குமுறுதுங்க-உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளைப் போடுறாங்க பாருங்க -அந்த சண்டாளர் ஏங்கவே-தன்னலமும் நீங்கவே தாரணி மீதிலே பாடுங்க ராகம் (கா (கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/31&oldid=1705894" இலிருந்து மீள்விக்கப்பட்டது