பக்கம்:பராசக்தி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 -31- எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை -ரோட்டிலே இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ இந்த நாட்டிலே பட்சி சாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க பழக்கத்தை மாத்தாதீங்க-எங்கே பாடுங்க (கா (விமலா பாடலின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு அங்கு வர அவளைக் கண்டு குணசேகரன் பயந்து ஓடுகிறான்! அவள் அவனுக்கு "புதுமைபித்தன்" என்ற பட்டம் சூட்டுகிறாள்) காட்சி -27 [சந்திரசேகரன் வீட்டில்) சேகர்: அப்பா இறந்துபோய் விட்டார் கடைசியாக ஞான என் தங்கை இட்லிசுட்டு விற்க வேண்டியதாயிற்று. சேகரன் இறந்ததை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. வந்த: அவுங்க போட்டோ இருக்கா? சேகர் : கல்யாணி போட்டோ இல்லை சேகரன் போட்டோ இருக்கு. ஆனால் குண காட்சி-28 நாராயணபிள்ளை என்ற பசுத் (கள்ள மார்க்கட்காரன் தோல் போர்த்திய புலி தன் சூழ்ச்சியான நயவஞ்சக நாட கத்தை ஆரம்பிக்கிறான்) காந்தா : ஏது இவ்வளவு புத்தகம். நாரா : எல்லாம் அந்த சி.ஐ.டி. பண்டிதருக்குத்தான். அவன் நம்ம வீட்டிலே இருந்த கந்த புராணத்தில் இருந்து வள்ளி சினிமா பாட்டு புத்தகம்வரை படிச்சுட்டான். இப்ப என்னென்னமோ வந்திருக்கு. குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, ரங்கூன் ராதா, இலட்சிய வரலாறு எல்லாம் ஐம்பது ரூபாய் ஆய்ச்சு...ம் கல்யாணி.. காந்தா- சொல்ல மறந்துட்டேனே இன்னிக்கு ஒரு புது படம் ரிலீஸ் ஆயிருக்கு.பெயரு கிருஷ்ண லீலா- கர்ந்: வாங்களேன் செகன்ட் சோவுக்குப் போகலாம். நாரா: நான் பார்த்துட்டேன் மாட்னிஷோவே. நீ போய் பார்த்துட்டு வா. காந்: நாளைக்குப் போறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/32&oldid=1705895" இலிருந்து மீள்விக்கப்பட்டது