பக்கம்:பராசக்தி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-32- நாரா : அடா போயேன். விஷயம் இல்லாமல் சொல்ல மாட்டேன். அதிலே லவ்சீன் ரொம்ப பிரமாதம், நான் பார்த்துட்டேன் நீ போயிட்டு வர்றியா? காந் : சரி நான் போயிட்டு வர்றேன். நாரா : ஹும்-போ-டேய் கருப்பா அம்மாகூட போ யிட்டு வாடா- கருப்: அப்ப நானும் கூட போகட்டுங்களா? நாரா : அட போடா மடையா! (காந்தாவும் கருப்பனும் சினிமாவுக்குப் போகின்றனர்) நாரா: [தனக்குள்) அப்பாடா தொலைஞ்சுது சனியன். ஆபத்பாந்தவா! அப்பனே! கல்யாணி விஷயத்தில் கொஞ் சம் கருணை காட்டேன். நீ யார் யாருக்கோ என்னென்னமோ பண்றியாமே! கல்யாணி! கல்யாணி! கல்: ஏன் எஜமான்? போ நாரா : காந்தா அவபாட்டுக்கு சினிமாவுக்குப் யிட்டா. அந்தக் கண்ணாடியைக் கொஞ்சம் எடேன். செகன்ட்ஷோ...மண்ணாங்கட்டி பன்னிரண்டு மணிக்குத் தான் வருவாள். இனிமேல் எடுக்கிறதுக்கெல்லாம் உன்னைத் தான் கூப்பிடனும்-உனக்குப் படிக்கத் தெரியுமா? கல் : தெரியும். நாரா : பலே, பலே எல்லாம் படி! கல் : சரி எஜமான்-. 66 அப்படின்னா இந்த புத்தகங்களை நாரா : "விதவையின் காதல்" கல்: ஆ!... [திகைக்கிறாள்] நாரா : அப்படி ஒரு புத்தகம். யாரோ பாரதிதாசனாம் விதவையைப் பற்றி சொல்லியிருக்கான் பாரு கோரிகையற்று கிடக்குதண்ணே -இங்கு வேரிற் பழுத்த பலா விதவைக்குக்கூட காதல் உண்டாம் பாடாத தேனீக்கள் உலவாத தென்றல் பசியாத நல்வயிறு பார்த்தது உண்டா? கல் : சரி எஜமான் எனக்கு தூக்கம் வருகிறது. நாரா : எனக்கு தூக்கம் வரலையே? கல்யாணி உனக்கு எதிர்பாராத முத்தம் வேணுமா? கல்:ஆ [திடுக்கிடுகிறாள்] நாரா : அதுவும் ஒரு புத்தகம்தான். என்னென்னெல் லாமோ வந்திருக்கு. நானும் இப்பத்தான் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/33&oldid=1705896" இலிருந்து மீள்விக்கப்பட்டது