பக்கம்:பராசக்தி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-34- காந் : எனக்குத்தான் இந்த நாராயணப் பிள்ளை சங்கதி தெரியாதா? அதுதான் அடுத்த வீட்டு எதிர்வீட்டு பொம்பளை கள் கூட வரப் பயப்படாங்களே! நாரா : அவுங்க எதுக்கடி இங்கே வர்றாங்க! காந் : ஆமா ! ஒங்க அக்கா தங்கச்சியை ஒருவன் படி கையைப் பிடிச்சிழுத்தால் நீங்க சும்மா இருப்பீங்களா?" நாரா : என் இஷ்டத்துக்கு நான் செய்யறேன். நீ எண் னடி என்னைக்கேக்கிறது? காந் : அப்போ நானும் என் இஷ்டத்துக்கு யாரை யாவது கையைப்பிடிச்சி இழுத்திட்டுப் போகப்போகிறேன். நாரா : போயேண்டி போ! கருப் : ஐயோ என்னங்க எஜமான்! தாரா : போவடி போவ காந் : சீ1 மனுஷனை பாரு! கல்யாணி நல்லா தாழ்ப்பாள் போட்டுக்கோ! ஏதாவது நாய்கீய் வந்து நுழையும்! (கல்யாணி அவ்வீட்டை விட்டு வெளியேறுகிறாள்) க காட்சி-29 (தெருவழியாக பசியால் துடித்துச் செல்கிறாள் கல்யாணி) பொருளே இல்லார்க்கு தொல்லையா புது வாழ்வே இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா இறைவா நீ சொல்லையா பசியாலே வாடும் பாவி முகத்தை பார்ப்போர் இல்லையா எம்மைக் காப்போர் இல்லையா ஏழை எம்மை ஆதரிக்கும் இரக்கம் இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா இறைவா நீ சொல்லையா? வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா அதற்கழிவே இல்லையா பொருளில்லாதார் இல்லையெனும் - உலகில் பொருளில்லாதார் இல்லையெனும் இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா பொரு (பொரு திருநாளே இல்லையா இறைவா நீ சொல்லையா (பொரு காட்சி-30 (நாராயணப் பிள்ளையும், கருப்பனும் கோவிலுக்குச் சென்று வரும் வழியில்! பிச்சை : ஐயா! அந்த தேங்காய் முடியிலாவது ஒண்ணு கொடுங்கையா! (கருப்பன் கொடுத்தல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/35&oldid=1705898" இலிருந்து மீள்விக்கப்பட்டது