பக்கம்:பராசக்தி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-35- நாரா : ஏண்டா திமிர் பிடிச்ச பயலே! தேங்காயை ஏண்டா கொடுத்தே? கருப்: கோயிலிலே தர்மம் தலைகாக்கும்னு. பிரசங்கத்திலே சொன்னாங்களே நாரா : கோயிலிலே உனக்கும் எனக்குமா சொன்னான்? பணம்டா? கொண்டா இங்கே (திருப்பி கேட்கிறார்) பிச் : ஏழைங்க எஜமான்! நாரா ; ஏழை...எழவு (அடித்தல்) ஏ - நாயே! ஒனக்குப் பிரசாதம் கேக்குதா? (இந்நேரம் குணசேகரன் வருகிறான்) நாரா: யாரடா நீ? குண : உங்களை எங்கேயோ பாத்தாப்புல இருக்குல்லே நாரா : பார்த்திருப்பே பார்த்திருப்பே. குண நீங்க... நீங்க... நாரா : ஜெனரல் மெர்ச்சண்ட் நாராயணப் பிள்ளை குண : நானு சேர்மையா நாரா : வேலைக்காரனா? குண : உங்களை... நாரா: சேர்மன் பார்க்கனும்னாரா? குண : ஆமா! ஆமா! அவருகூட உங்ககிட்டே தாரா : சர்க்கரை வேணும்ாரா? அவருக்கு மூட்டை முட்டையால்ல வேணும், சாயந்திரமாக நம்ம வீட்டு பக்கமா வா இரசியமாக தர்றேன். குண : ப்ளாக்கிலே தர்றீங்களா? நாரா : அட நீ என்னப்பா? குண : அப்போ... சாயந்திரமா வரட்டுங்களா? ப்ளாக்லே தர்றீங்களா? நாரம் : வா...வா. குண : அப்போ; இப்போ நான் போகட்டுங் களா? (நாராயண பிள்ளையை அடிக்கிறான்) நாரா : என்னடாப்பா இது? குண : இது அடிடாப்பா! ஏ நாயே உனக்குத் தேங்கா கேக்குதோ? ஏழைகளுக்குப் பிரசாதம் கேட்குதா? கொண் டாடா இங்கே? நாரா : பராசக்தி உஸ்னா ஓட்றபசங்க இன்னிக்கு அடிக் கிற அளவுக்கு வந்துட்டானுங்க. குண : ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஒரு நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பராகிவிடுவார் உணரப்பர் நீ ப்ளாக்கிலே தர்றீங்களா? இந்தா ப்ளாக்வே ஒண்ணு வாங்கிக்கோ... (நாராயணரைக் குணசேகரன் காலால் உதைத்துக் கீழே தள்ளுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/36&oldid=1705899" இலிருந்து மீள்விக்கப்பட்டது