பக்கம்:பராசக்தி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-37- காட்சி 33 (விமலா வீட்டில் குணசேகரன் தன் கதையைக் கூறல்) குண: முத்து' எடுக்கப் போய் கிழிஞ்சல் பொறுக்கிய கதையாக முடிந்தது தங்கையின் வீட்டில் மகிழ்ச்சி தவழும் உற்சாகம் ஊஞ்சலாடும் களிப்பு கொஞ்சும் என்றெல்லாம் மீனவு கண்டேன். ஆனால் அங்கு வேதனை விளையாடிற்று. நானே வறுமையிலடிப்பட்டு பைத்தியக்காரனாய் அங்கு சென்றேன். இந்நிலையில் அறிமுகம் ஒரும்கடா? என் தங்கை யிடம் நான் யாரென்று சொல்லி அவள் வாழ்வை வேதனைப் படுத்தக்கூடாது. அவள் அழுதது போதும், அன்னும் அழ வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் என் அன்புத் தெய்வம் கல்யாணி என் கண்களுக்கு அப்பால் வெகுதூரம் சென்றுவிட்டாள் தேடுகிறேன்! தேடுகிறேன்! தேடிக் கொண்டே இருக்கிறேன். ம: அழுவதா? சிரிப்பதா என்றே தெரியவில்லை.உன் கதையைக் கேட்ட பிறகு. குண : ஏன்? ம : அன்பு இருக்கிற அளவுக்கு உன்னிடத்தில் அறிவு இல்லை. இப்படி சொல்கிறேனே என்று ஆத்திரப்படாதே உன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட போதே நீ சென்றிருக்க வேண்டும் போலீசாரிடம் குண : ஒரு பாவையோடு போனேன்.. பானம் அருந்தி னேன்.. பணத்தைப் பறிகொடுத்தேன் இதை போலீசாரிடம் சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. திரிந்தாய் வெட்கமில்லை. விடீ : பிச்சைக்காரனாய் திரு-னாய் மாறினாய் அப்போதும் வெட்கமில்லை. ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்லமட்டும் வெட்கப்பட்டிருக் கிறாய் வேடிக்கையான மனிதன். குண: உனக்குத் தெரியாது சமுதாயமே பிச்சைக்கார மடம், பைத்தியக்கார விடுதி, திருடர் குகை இதில் நான் மட்டும் வெட்கப்படுவானேன், வி10 :ஆம்! சமுதாயம் பிச்சைக்காரர்மடம்தான். ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி. சமுதாயம் பைத்தி யக்கார விடுதிதான் அதில் நீ கல்லெறியத் தெரியாத பைத் தியம். சமுதாயம் திருடர் குகைதான் அதில் நீ கன்னக்கோல் பிடிக்கத் தெரியாத திருடன். சமுதாயத்தை காரசாரமாய் உனக்குத் தெரியாமலே திட்டுகிறாயே யோசித்துப் பார்! சமுதாயத்தோடு சேர்ந்து முட்டாளாகி இருக்கிறாய் நீ. குண : முட்டாளா? நானா? விம: ஆம். ஆயிரம் முறை சொல்கிறேன். பிச்சைக் கார உடையிலே எத்தனைபேர் பணக்காரராய் இருக்கிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/38&oldid=1705901" இலிருந்து மீள்விக்கப்பட்டது