பக்கம்:பராசக்தி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-38- பைத்தியக்கார வேஷத்தில் எத்தனை பேர் லட்சாதிபதிகளாய் உலவுகிறார்கள். தேவாலயத் திருப்பணி திருமாலுக்கு திரு விழா..... இந்தத் திரையிலே எத்தனைத் திருடர்கள் உலவு கிறார்கள் நீயும் மாறினாயே திருடனாய் பித்தனாய்.. பிச்சைக் காரனாய் முடிந்ததா உன்னால் அந்த மோகன வாழ்வு பெற. குண : எனக்குத் தேவையானது மோகன வாழ்வல்ல, கல்யாணி ! என் தங்கை கல்யாணி! விம : இப்போதும் உன்னைக் குற்றம் சாட்டுகிறேன். நீ ஒரு சுயநலவாதி உள் சொந்தத் தங்கைக்காக அவள் சோபித வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத் தாவது பார்த்தாயா? உன் சொந்த தங்கைக்காக நீ அலையும் போது வீதியிலே வேலி ஓரங்களிலே வீட்டு வாகல்களிலே நீர்பெருக்கி விம்மும் குரலில் பசிபசி எனப் பதறியழும் பாவை யர்களைப் பார்த்திருப்பாயே அவர்களெல்லாம் யார். கல்யாணி கல்யாணி என்று கதறுகிறாயே ஒரு கோடிக் கல்யாணிகள் கண்ணிரும் கம்பலையுமாக கதியற்று நடைபிணமாய் நாட்டி வே நடமாடுகிறார்களே அதற்காக உன் நாவு அசைத்ததுண்டா உன் நெஞ்சு துடித்ததுண்டா? கல்யாணியல்ல குண: எனக்கேன் துடிக்கவேண்டும்? கெட்ட சமுதாயத்திற்கு நன்றிகெட்ட நாட்டிற்கு ஏழைகளை இந்தக் கேடு மிதித்து வாழும் எத்தர்களுக்குத் துடிக்கவேண்டும். நெஞ்சு உயிர் உடலெல்லாம் எனக்கேன் துடிக்கவேண்டும். . விம : அந்தச் சமுதாயத்திலே நீயும் ஒரு அங்கம். குண: ஆனால் ஏழை விம: அப்படி ஆக்கப்பட்டாய் இதைக்கேள்! பறித்துக் கொண்டாளே, நாடோடியை நான் பாராட்டுகிறேன்! ஏமாற்றிப் பணத்தை குண : பாராட்டுகிறாயா? உன்னை அந்த விம: ஆம்! உன் கண்ணைத் திறந்தவள் அவள் தான் நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால் ஏழை உலகை நினைத் துக்கூட இருக்க மாட்டாய். தாகவே உனக்குத் தெரிந்திருக்காது. உன் உலகம் உல்லாச அப்படி ஒரு உலகம் இருப்ப புரியாக இருந்திருக்கும். மாளிகையிலேயே வீசும் தென்றலை அனுபவிப்பாய் குடிசையிலேயே குமுறும் புயலைக் காணமாட் டாய், சமுதாயக் கோணல்களை வெறுக்கக் கற்றிருக்கிறாய் ஆனால் எரிமலையைத் தண்ணீர் ஊற்றி கிறாய். மலைப் பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய். சமுதாயப் அணைக்கப் பார்க் புரட்சி ஆலகால விருச்சத்தின் கிளையை வெட்டுவதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/39&oldid=1705902" இலிருந்து மீள்விக்கப்பட்டது