பக்கம்:பராசக்தி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதியின் பராசக்தி முமு வசனம்-பாடல்கள் காட்சி - 1 (மதுரையில் கல்யாணிக்குத் திருமணம் நடக்கப் போகும் சமயம் அவளது அண்ணன்மார்களான சந்திரசேகரன், ஞான சேகரன், குணசேகரன் ஆகிய மூன்று பேரும் ரங்கூனில் இருக் கின்றனர். அப்போது மதுரையில்...ஒரு கூட்டத்தில் நாட் டியம் நடைபெறுகிறது.) வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு சூழும் தென் கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல் சேர் வங்கம் (வாழ்கவே ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறனும் செறிந்த நாடு (வாழ்க பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளு மலையாளம் கண்டை நிகர் கன்னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு (வாழ்க அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக்குவியும் கடல்கள் முகிலும் செந்நெல்லும் முழங்க நன்செய் முல்லைக் காடு மணக்கும் நாடு (வாழ்க ஆற்றில், புனலின் ஊற்றில், கனியின் சாற்றில் தென்றல் காற்றில் நல்ல ஆற்றல் மறவர் செயலில் பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு வாழ்க (ஆடல்,பாடல்கள் முடிந்தவுடன் மாப்பிள்ளை பேசுகிறார்) தங்கப்பன்: (மாப்பிள்ளை பெரியோர்களே இதுவரையில் யுதுமையின் குரலை புதுமையாட்டத்துடன் கலந்து ரசித்தீர் கள். இத்தகைய எழில்மிக்க நாட்டின் குழந்தைகள் இந்த மண் மாதாவின் மடியிலே தவழாமல் வேறு நாடு சென்று வருகின் றனர். இதை நினைக்கும் போது நமது அறிஞர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது காரணம் கற்பனையாக சொல்லப்போனால்... சொந்த நாட்டிலே பிழைக்க வழி இல்லாமல் அயல்நாடு சென்று தமிழர்கள் அழுது வடித்த கண்ணீர்தான் காரணம் என்றார். அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/4&oldid=1705867" இலிருந்து மீள்விக்கப்பட்டது