பக்கம்:பராசக்தி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-42- கல் : சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன். ஆபீ : அப்படி ஒருவரும் இல்லையே! அதோ அந்த ஆல் மரத்தடிலே ஒரு கூட்டம் இருக்கு அங்கே போயி விசாரி கல் : அண்ணா நீங்களெல்லாம் பர்மாலே இருந்துதானே வர்றீங்க? ஒரு : ஆமாம்மா அகதிகளாக வந்தோம், ஆண்டிகளாக மாறிவிட்டோம்! கல் : இரங்கூனில் என் அண்ணன்மார்களைத் தெரியுமா? யற் : ஊகும். அவுங்க பேரு என்ன? கல் : சந்திரசேகரன்... ஞானசேகரன்... குணசேகரன்.... ஒரு : எங்ககூட்டமே இவ்வளவு பேருதான் இதிலே உன் அண்ணன்மார்கள் இருக்காங்களான்னு பாரு (கல்யாணி பார்க்கிறாள் இல்லை) காட்சி-36 /பசி வாட்ட வே கல்யாணி பிச்சைக் கேட்கிருள்) கல் : அய்யா நானும் குழந்தையும் சாப்பிட்டு ஆறுநாள் ஆகுது. اته நாங்க சாப்பிட்டு மூணுநான் ஆகுது. 店 பிச்சைன்னு தெருத்தெருவா கேட்குற நாங்க வீட்டுக்குள் ளேயே இருக்கோம். இதுதான் வித்தியாசம் இன்னிக்கு ஜட்ஜி சேகர் வீட்டிலே விருந்து அங்கே போயி கேளு. கல் : எந்த வீடய்யா? வீட் : அதோ தெரியுது பாரு அந்த மூல வீடுதான். (கல்யாணி போகிறாள்) காட்சி - 37 (வசூலுக்கு போயிருந்த நொண்டி வருதல்) நொண்டி : இராகவா இன்னிக்கு ஏதாவது விசேஷம் உண்டா? ராக : பாவம் ஒரு பிச்சைக்காரி ஒரு குழந்தையுடன் வந் தாள் நாங்களெல்லாம் யாருன்னு கேட்டாள். நாங்கள் இரங் கூனிலே இருந்து சம்பாதிச்சிட்டு வர்றோம்னு சொன்னோம்... இரங்கூனிலே என் மூன்று அண்ணன்மார்களைத் தெரியுமான்னு கேட்டாள். தெரியாதுன்னு சொல்லிவிட்டோம். நொ : அவர்களது பெயரை என்னவென்று சொன்னாள்? ஒரு : அதுநம்ம தமிழ்நாட்டு பெயராகவே தெரியலையே? ராக : என்னமோ - சந்திரசேகரன்... நொ : சந்திரசேகரன்,ஞானசேகரன், என்றாளா? எல் : ஆம்... ލ குணசேகரன் நொ : அய்யோ கல்யாணி! என் தங்கை கல்யாணி! கல் யாணி! (என்று கதறி கீழே விழுகிறான்) காட்சி- 38 (சந்திரசேகரன் வீட்டில் கல்யாணி பிச்சை கேட்கிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/43&oldid=1705906" இலிருந்து மீள்விக்கப்பட்டது