பக்கம்:பராசக்தி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48- கல் : அய்யா! குழந்தையும் நானும் பட்டினி. சேகர் : சரி அப்புறமா வா! கல் : அய்யா நல்லா இருப்பீங்க! சேகர்: உனக்கு ஒருக்கா சொன்னாத் தெரியலையே கல் : அய்யா உங்களுக்கு கோடி புண்ணியம்... (சேகரின் காலைப் பிடிக்கிறாள்) சேகர்: புண்ணியம் பார்த்துப் பார்த்துத்தான் தங்கச்சி முகத்தைக்கூட பார்க்க முடியாமல் போச்சி (என்று கல்யா ணியை காலால் உதைத்து தள்ளுகிறார்) கல் : அடபாவிகளே! நீங்கள் சகோதரர்கள் கூடப்பிறக்க வில்லை பசியால் துடிக்கும். என் பாலகனைப் பார்த்த பிறகும் பாட்டைத் தலையைக் கண்ட பிறகும் பாவிகளே! உங்கள் கண்ணில் பஞ்சடைத்து விட்டதா பாவம்... புண்ணியம்... நரகம் என்று பேசும் ஆகிம்சா மூர்த்திகளே நரகம் என்று ஒன்று இருந்தால் அதிலே உங்களுக்கு இடம் சரியாய்ப் போய் விடும் சரியாய்ப் போய்விடும். (வேலைக்காரனால் விரட்டப்படுகிறாள்) கல் : கண்ணே! ஆடம்பரத்துக்கும் அக்கிரமத்துக்கும் அடங்கி நடப்பது தாண்டா உலகம்! இந்த உலகத்தில் நமக்கு வாழ இடம் கிடையாது. என்ன பார்க்கிறாய் கண்ணிலே வடி யும்கண்ணீர் பாலாகக் இருக்கக் கூடாதா என்று பார்க்கிறாயா? நீயும் நானும் அடிபட்டதை உன் அப்பா பார்த்திருக்க வேண் டும் உன் மாமன்மார்கள் பார்த்திருக்க வேண்டும். உன் அப்பா வும் மாமாவும் இருந்தால் நிதான் உன் அப்பாவை கர்ப்பத் திலே விழுங்கி விட்டாயே. ஏன் அழுகிறாய்? பசிக்குதா அழாதே பசியை என்னாலேயே தாங்க முடியவில்லையே உன் னால் எப்படித் தாங்க முடியும் வா போவோம். காட்சி--39 (தங்கையை தேடி அலைந்த குணசேகரன் தன் நெஞ்சுக் குமுறலை பாடல் மூலம் வெளியிடுகிறான்) நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் (நெஞ்சு அஞ்சியஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டிலென்பார்-மிகத் துயர்படுவார் எண்ணி பயப்படுவார் (நெஞ்சு கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/44&oldid=1705907" இலிருந்து மீள்விக்கப்பட்டது