பக்கம்:பராசக்தி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44- பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழியுமில்லையே குப் : அண்ணே நீ பாடினபிதல்லால் சரிதான் (நெஞ்சு குண : இந்தப் பாட்டைட நான் பாடலே குப்பா இந்த எல்லோரும் பாட்டை நான் பாடியிருந்தால் வருவாங்க இது வேறே ஒருத்தர் பாடியது அடிக்க பூசாரி : டேய் குப்பா தீவெட்டி பூஜைக்கு நேரமாகுது மணி அடிக்கவாடா (குணசேகரன் போய்விடுகிறான்) குப் : என்னாண்ணே! போறே? நாளைக்கு வாறியா? (பூஜை முடிந்தவடன் கல்யாணி வருகிறாள் கல் : (சிலையை நோக்கி) தாயே பராசக்தி! எனக்கு நீ தான் கதி! லோகமாதா என்னைக் காப்பாற்று. பூசாரி : யாரது? கல் : கதியற்றவள் பெயர் கல்யாணி. பூசாரி : கவலைப்படாதேயம்மா உன் கஷ்டங்கள் எல் லாம் தீருவதற்குத்தான் அம்பாள் கோயிலுக்கு வந்திருக்கே நீஎன் பாண்னுமாதிரி இருக்கே! உள்ளே சென்று என் தாயைத் தாராளமாக வணங்கம்மா! (கல்யாணி உள்ளே போகிறாள். சென்றவுடன் பூசாரி தனக்குள் : ஆஹா! என்ன அழகு என்ன உடம்பு! என்ன வாலிபம்! இன்று இவளை விடக்கூடாது வழி பலாத்காரம் பலாத்காரமா? பராசக்தி கோவிலிலா? ஆம் வேறு எங்கே செல்வது பூசாரி சுட்டக்கல்லை சோறு என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றினாய் கற்பழிப்பதா? ஆம் இதைச் செய்வதில் என்ன? அம்பாள் இருக்கிறாள் என்று பார்க்கிறயா? அவள் இந்த இடத்திலேயே தான் இருப்பாள். நகரமாட்டாள். ம்... தாமதிக்காதே (கல்யாணியின் கையைப் பிடித்து) கல்யாணி வேறு வித்தியாசமா நினைக்காதே. வியாதியுள்ள பெண்களைத் தொடுவதற்கு எப்படி டாக்டருக்கு உரிமை இருக்கிறதோ, அதுபோல பக்தியுள்ள பெண்களைத் தொடுவதற்கு ஆண்ட வர்களுடைய அடியார்களாகிய எங்களுக்கு உரிமை யுண்டு. கல் : சீ...காமப்பேயே-- தாயே பராசக்தி ஏன் 34 (பூசாரி கல்யாணியின் கற்பைக் கசக்க முயல்கிறான். ஆனால் குப்பன் இக்காட்சியைக் கண்டு மணியை அடித்து விடுகிறான். புலி வாயின் பிடியிலிருந்து புள்ளி மான் தப்பி ஓடுகிறது) காட்சி-40 (தொல்லைகளாலும் பசிக்கொடுமையாலும் கன்னியரின் கற்பைச் சூறையாடும் கயவர்களாலும் கல்யாணி துரத்தப் பட்டு அவள் வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விட்டாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/45&oldid=1705908" இலிருந்து மீள்விக்கப்பட்டது