பக்கம்:பராசக்தி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46- உன்மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்? கல்: நான் என்ன சொல்வது? உங்கள் சட்டம் என்ன சொல்லுகிறதோ அப்படியே செய்யுங்கள் நீதி: நீ கொலைகாரிதானே? கல்: ஆம்! உங்கள் சட்டப்படி; நியாயப்படி அல்ல. நீதி : பெற்ற குழந்தையை கொல்வதுதான் நியாயமா? கல் : நான் பெற்றேன், நானே அழித்தேன், பெறுவ தற்கு உரிமையிருக்கிறது போலவே அழிப்பதற்கும் உரிமை இருக்கிறது. நீதி: ஆக்கப்பட்ட பொருள்கள் அளைத்தும் அரசாங்கத் துக்குச் சொந்தம். கல்: சொந்தம், சோற்றுக்கு கஷ்டப்பட்டோம். சுகத் தைத்தேடி சுற்றியலைந்தோம், சொறி நாயிலும் கேவலமாக நடத்தப்பட்டோம். பசிபசியெனப் பதறியழுதோம்; பட்டினி புழுக்களாய்த் துடித்தோம்; துவண்டோம் நெளித்தோம்- அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்கவில்லை அரசாங்கம். அநீதியிடையே வாழவேண்டாம்; இறப்புல்கில் இன்பம் காண்போம் என்று சாவதற்குச் சென்றல் சட்டம் என்ற கையை நீட்டி சொந்தம் என்ற சூழ்ச்சி மொழி பேசு கிறது! அரசாங்கம் அதிசயமரன அரசாங்கம் அற்புதமான நிதி நீதி : குதர்க்கம் பேசாதே குழந்தையைக் கொன்றது குற்றம் ஒப்புக்கொள்கிறாயா இல்லையா? நடச் கல் : குற்றம்! இது குற்றமென்றால் ஏழு குழந்தைகளைக் கிணற்றிலே எறிந்தாளே நல்லதங்காள் அது எவ்வளவு பெரிய குற்றம்? நல்லதங்காள் கதை நாடெல்லாம் கிறதே அதை ஏன் தடுக்கவில்லை சட்டம்? பள்ளை கறி சமைத் தார் சிறுதொண்டர் என்று பெருமை பேசுகிறார்களே அது தடுக்கப் படவில்லை? அவர்கள் கற்றுகொடுத்த ஏன் பாடத்தைதானே நான் செய்தேன் இது எப்படி குற்றம்? நீதி : நல்லதங்காளையும் சிறுதொண்டரையும் காரணங் காட்டி இங்கே பேசாதே... உன் ஆத்திர உணர்ச்சி நீதியை அவமதிக்கக்கூடாது, நடந்த விஷயத்தை மட்டும் நீ கூற வேண்டுமேயன்றி அரசாங்கத்தையோ சமூகத்தையோ குறை கூறுவது பொருத்தமில்லை. கல் : பரியால் பதறினான் என் பாலகன், வெட்கமில்லா மல் சொல்கிறேன் இங்கிருப்பவர்களையெல்லாம் சகோதரர் களாக நினைத்து. என் குழந்தை நாக்கு வறண்டுபோய் என் மேலாடையை நகர்த்துவான், பலநாள் பட்டினி கிடந்த இப்பாவியிடம் பாலா இருக்கும்? அந்தக் கொடுமை தாங்க முடியவில்லை, கொன்றுவிட்டேன். இது குற்றமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/47&oldid=1705910" இலிருந்து மீள்விக்கப்பட்டது