பக்கம்:பராசக்தி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1471 நீதி : குழந்தையை எப்படியும் காப்பாற்ற வேண்டும். கல்: என் குழந்தை என்ன பார்வதி வந்து பால் கொடுத்துக் காப்பாற்ற? நான்தானே திருஞானசம்பந்தரா காப்பாற்றியாக வேண்டும். என்னை வாழவிடாமல் என் வரலிபம் எனக்கு இடையூறாக இருந்தது வஞ்சகர் வலையிலே வீழாத காரணத்தால் சட்டத்தின் முன் நிற்கிறேன் குற்ற வாளியாக ஆனால் நான்மட்டும் கொஞ்சம் உதட்டை அசைத் திருந்தால் உப்பரிகையிலே உலாவிக் கொண்டிருப்பேன் விதவையாக அல்ல விஷமம் பிடித்தவளாக அல்ல. விபச்சாரி யாக விபச்சாரியாக. அதைத்தானே இந்த சமூகம் விரும்பு கிறது. அப்படித்தானே இந்த சமுதாயத்தை எதிர்க்க முடி கிறது. வேறு எப்படி வாழ முடியம் அனாதையாக. நீதி : நீ அனாதையா? கல் : ஆம் காலம் என்னை அனாதையாக்கிற்று. நீதி : கதை பேசாதே விஷயத்தைச் சொல். கல் : பிறந்த மறுநாளே தாயார் இறந்துவிட்டாள். தகப்பனார் நிழலிலே வளர்ந்தேன். தமையன்மார் மூன்று பேர் அவர்களை நான் சரியாகக் கூட பார்த்தது கிடையாது. அவ் வளவு-இளமையிலேயே இரங்கூன் சென்றுவிட்டார்கள். கல்யாணமாயிற்று எனக்கு. கணவர் இறந்தார், தந்தையும் இறந்தார். இரங்கூனிலிருந்து எனது அண்ணன்மார் சந்திர சேகரன், ஞானசேகரன், குணசேகரன் வந்துவிடுவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்; வரவில்லை அண்ணன்மார். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பிச்சைக் காரியாய்த் திரிந்தேன். நாட்டிலே எனக்குக் கிடைத்த பதில் போடி வேலையற்றவளே என்பதுதான். ஒரு நீதிபதியாம் நேர்மையை அனுஷ்டிப்பவராம். பிச்சைக் கேட்கப்போன என்னைப் பூட்ஸ் காலால் உதைத்தார். (நீதிபதி கல்யாணி தன் தங்கையென தெரிந்து அதிர்ச்சியடைந்து கீழே விழுகிறார்.) காட்சி-42 (ரோட்டில் பிரசங்கி பேசுகிறார்) சேகர் பிர: உலகப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ் நாட்டின் முத்துக்களை சாராயத்தில்போட்டு குடித்தாளாம். அத்தகைய தமிழகத்தின் பெண்களோ இரங்கூனுக்கும் சிங்கப்பூருக்கும் சென்று ஆடவர்கள் சம்பாதித்து அனுப்பும் பணத்தை எதிர் பார்த்து பட்டினி கிடக்கினார்கள், ஆலயங்கள் இங்கே. ஆண் டவனுக்கு வைரக்குல்லா தங்கக் கவசம் ரத்தின சிம்மாசனம், அந்த ஆண்டவளின் அருமைக் குழந்தைகளோ அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல்படுகிறார்கள். கேள்விப்படு கிறோம் நண்பர்களே தாய் தன் குழந்தையை விற்றாள் என்று. பசியின் கொடுமையால் பல தாய்மார்கள் குழந்தையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/48&oldid=1705911" இலிருந்து மீள்விக்கப்பட்டது