பக்கம்:பராசக்தி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. விற்றுவிட்டார்களாம். தாயார் குழந்தையை விற்குள்! பத்து மாதம் சுமந்து படாதபாடு பட்டதாய் பாலூட்டி சீராட்டி வளர்த்த தாய், தொட்டிலிலே போட்டு ஆராரோ பாடிய தாய் வெள்ளிகிண்ணத்தில் பால்சோ ாறு போட்டுத் தாழ்வாரத்திலே தவழ்ந்தோடும் பிள்ளைக்கு ஊட்ட வேண்டும். என்று கணவு கண்டிருந்த தாய் மஞ்சள் நீராட்டி மகனின் மழலை மொழி கேட்டு பெள்ளிக்குச் செல்லடா கண்மணி என்று அவன் பிள்னழகைக் காணவேண்டுமென்று துடித்துக் கிடந்த தாய், மசதுக்குத் திருமணம் செய்து மகளும் மரு மகளும் மஞ்சத்திற்குச் செல்லும் அந்த நாளும் வாராதோ என்ற ஒங்கிக்கிடந்த தாய், தான் பெற்ற குழங்தையை தன் வயிற்றிலே கிடந்த வைரத்தை வைடூரியத்தை, கோமே தகத்தை, தங்கத் தாம்பளத்தை விலைமதிப்பு கூறுகிருன். 'பிஸ்காயோ பிள்ளை, என்று மார்க்கெட்டில் கீரையே கீரை என்று கூறுவதுபோல ரட்ட நறவுக்குக் குரத்தையாம்! பெரிய குழந்தை ஐந்து ரூபாய் பிஞ்சுக் குழந்தை மூன்று ரூபாம், கொடுமை!அகாடுை இதோ இங்கிலாசு கொடுமை, குழந்தைக்கும் தனக்கும் உணவு கிடைக்காத காரணத்தால் குழந்தையை ஆற்றிலே எறிந்துவிட்டு தானும் தற்கொலை செய்து கன்னப்போதும் போது பிடிபட்டு கோர்ட்டிக் குற்றவாளிக் கூண்டிலே மரண தண்டணைக்காக காத்திருக்கிறள் கல்யாணி என்ற பெண். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குணசேகரன் எழுந்து ஓடுகிறான் எதிர்ப்பட்ட குப்பனை சந்திக்கவே தன் தன்மை கல்யாணியை பூசாரி கற்பழிக்க முயற்சித்தான் என்பது அறிந்து ஆத்திரத்துடன் பராசக்தி கோவிலுக்குச் செல்கிறான் காட்சி-46 ம் காளியம்மன் கோவில்! பராசக்தி கோவிலில் குணசேகரன். பூசாரியைத் தாக்கும் காட்சி) பூசாரியின் தடபுடல்கள் காவடிகள் அம்பாளுக்கு ஆராதனைகள் அர்ச்சனைகள் தேவி விழா! ஒரே அமர்க்களம் பாடைக் காவடியொன்று பராசக்தி சன்னதிக்கு வருகிறது பூசாரியின் அதிதீவிர பூஜைக்குப் பின் பாடையிலிருந்தவன் எழுந்திருந்தான் என் கிழவி : தாயே! பராசக்தி! என் மகனுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையைச் செலுத்திட்டேன். குழந்தையைக் காப்பாற்று தாயே. பூசா: ஓம் ரீம்கிரீம் உன் பிள்ளை உடம்புக்கென்னம்மா கிழ: அம்பாள் குடிகொண்டிருந்தா என்பிள்ளை உடம் பிலே ஒரு வில்லங்கமும் வராமல் இருந்தால், பாடைக் காவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/49&oldid=1705912" இலிருந்து மீள்விக்கப்பட்டது