பக்கம்:பராசக்தி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1— ஏன்? இதோ நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் திருமதிகல்யாணி தன் சகோதரர்களின் முகத்தையே பார்த்த தில்லையாம்! அவ்வளவு இளமையிலேயே அவர்கள் இரங்கூன் சென்றுவிட்டனர். அவர்கள் மட்டுமல்ல எத்தனையோ லட்சக் கணக்கான இளைஞர்கள். எத்தனையோ குடும்பங்கள்! மலேயா வின் ரப்பர் தோட்டத்திலே! ஆப்பிரிக்காவிலே, இலங்கை யிலே அவர்கள் எல்லாம் நம் திரு நாட்டுக்குத் திரும்ப வேண் டும். அதைத்தான் இந்த அழகிய பாடலும் நமக்கு நினை ஆட்டுகிறது. காட்சி-2 (இரங்கூனில்...குணசேகரன் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஞானசேகரன் வருதல்) ஞான: தம்பி! தம்பி குணசேகரா டேய் எழுந்திரு இன் னுமா தூங்குறே? எழுந்திரப்பா தம்பி டேய் குணசேகரா? (ரேடியோ வைத்தல்) டேய் கும்பண்ணா எழுந்திரு குண : ம்... அய்யய்யோ...என் னாண்ணே! போது வந்து விளையாண்டுகிட்டு... தில்ல. சான், (இந்நேரம் சந்திரசேகர் வருதல்) தூங்குற சந் : என்ன ஆரம்பிச்சிட்டீங்களா? பொழுதுவிடிஞ்சுட்டு ஞான : அண்ணா குணசேகரன் இப்பத்தான் எழுந்திரிச் குண : இல்லையண்ணா நான் காலையிலே அஞ்சரைமணிக் கெல்லாம் எழுந்திரிச்சிட்டேன். ஞான : இல்லேண்ணா பொய் சொல்றான். சந்: ஞானசேகரா! ஏம்பா பொய் சொல்றே! தம்பிக்குத் தான் சூரிய உதயத்தைப் பார்க்கவே பிடிக்காதேம். ஊரிலே இருந்து... குண : தங்கச்சி போட்டா வந்திருக்கா? சந் : தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் செய்து அப்பா கடிதம் எழுதியிருக்காரு! சந் : அட பார்ரா? நாம் எல்லோரும் எப்போ ஊருக்குப் போகிறது. சந் : டிக்கட் புக் பண்ணச் சொல்லி போன் பண்ணி விருக்கிறேன். பதில் இப்போ வந்திடும். (அண்ணியிடம் போதல்) குண் : அண்ணி! குட்நியூஸ்! கல்யாணிக்குக் கல்யா ணம் உங்களுக்குத் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/5&oldid=1705868" இலிருந்து மீள்விக்கப்பட்டது