பக்கம்:பராசக்தி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-49- எடுக்கிறதா வேண்டிக்கிட்டேன். அவ தயவுலே ஒரு கண் மாத்திரம் போயி பிழைச்சுக்கிட்டான் காணிக்கையும் செலுத் திட்டேன். பூசாரி : பயப்படாதே உன் மகன் தீர்க்காயுசா இருப்பான். (பராசக்தியின் சிலையின் பின்னாலிருந்து ஒரு குரல்) குரல்: ஏ பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கணித் துக்கொள். பூசாரியார் அம்பாளா பேசுகிறது. குரல் : அம்பாள் எந்தக்காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே? பூசாரி : பராசக்தி தாயே! (அம்பாள் சிலைக்குப் பின்னாலிருந்து பெரும் சிரிப்புடன் குணசேகரன் வெளிப்படுகிறான்) குண : இந்தப் பராசக்தி உனக்குத்தாய் என் தங்கை கல்யாணி உனக்குத் தாசி மானங்கெட்டவனே! அப்படித் தானே? பூசாரி : யாரப்பா நீ! இது என்ன விபரீதம் குண: விபரீதம் வருமென்று தெரியாத காரணத்தினால் தான் என் தங்கையோடு விளையாடியிருக்கிறாய் நீ பக்தர் களுக்கு ஆசீர்வாதம் புரியும் பரம பாதகா நீ இப்போது கூண் டிலே நிறுத்தப்பட்டிருக்கிறாய் இவர்கள் அத்தனைபேரும் நீதி பதிகள் தீர்ப்புக்கூறட்டும். பூசாரி : பராசக்தி! பராசக்தி • என் குண அது பேசாது கல் பேசுவதாயிருந்தால் தங்கையின் கற்பை சூறையாட துணிந்தபோது அட பூசாரி அறிவுகெட்ட அற்பனே நில்" என்று தடுத்திருக்காதா? உனது பலாத்கார அணைப்பிலே சிக்கிய என் தங்கை ஆயிரம் முறை அந்த பராசக்தியை அழைத்தாளாமே ஓடி வந்து அபயம் கொடுத்தாளா? பூசாரி : பக்தகோடிகளே! பார்த்துக்கிட்டு நிற்கிறீங்களே குண : ஏன் மனித உதவியை நாடுகிறாய் தேவிபக்தனே உன் தேவியின் கையில் சூலமிருக்க, சுழலும் வாளிருக்க சுக்குமாந்தடியிருக்க ஏன் பயந்து சாகிறாய்? பூசாரி : அபச்சாரம்! அபச்சாரம்! குண : அபச்சாரம். அம்பாளின் சன்னதியை ஆனந்த அறையாக்கிக் கொண்டது அபச்சாரமில்லையா? ஆலிங்கன விடுதியாக்கிக் கொண்டது அபச்சாரமில்லையா? கன்னியர் களின் கற்பையழிக்கும் காமக்கோட்டையாக்கிக் கொண்டது அபச்சாரமில்லையா? ஏ யூசாரி நான் சாவுக்குத் துணிந்து பரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/50&oldid=1705913" இலிருந்து மீள்விக்கப்பட்டது