பக்கம்:பராசக்தி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<-50- விட்டேன் எனக்குத் தெரியும் நான் செய்யப்போகும் காரியத் திற்கு எது வெகுமானமென்று, தூக்குமேடை தூக்குமேடை பரவாயில்லை புழுத்துப்போன சமுதாயத்தில் உன்போன்ற போலிப் பூசாரிகள் புண்ணியவான்கள் வேஷம் போடும் நாட கத்தை வீட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு என் செய்கை ஒரு பாடமாக இருக்கட்டும். பூசாரி : என்னடா தேவிக்கு விழா கொண்டாட்றபோது வந்து கலாட்டா பண்றே! (பூசாரி அரிவாளை ஓங்குகிறான்) குண : (பூசாரியின் கையிலிருந்து அரிவாளைப் பிடுங்கி கொண்டு) விழா1 தங்கையின் வாழ்வை பொசுக்க எண்ணிய உனக்கும் உன் தேவிக்கும் விழா! இல்லே, இதோ இந்தக் கத்திக்கு விழா1 இரத்த விழா! வீர விழா! வெற்றிவிழா? பூசாரியின் தலையில் வெட்டுகிறான்) காட்சி - 44 சேகர் : கல்யாணி! கல்யாணி! என் கல்யாணி ஏழை அவளுக்கு நல்ல சேலை கிடையாது ஒரே புடவை ஒட்டுத் துணி. அவளுக்கு வைரநெக்லஸ் கிடையாது அவள் கழுத் திலே கயிறுதான் இருக்கும்...அய்யோ அதுகூட கிடையாது. அவள் விதவை. சரஸ் : டாக்டர் டாக் : பயப்படாதீங்க மூளைக்கொதிப்பு மருந்து கொடுத் தால் சரியாகப் போய்விடும். சேகர்: மருந்து! ஹ ஹ எனக்கா மருந்து எனக்கு வேண்டாம் ஏழைக்குப் பசிக்காமல் இருக்க ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்க டாக்டர் கொடுக்கமாட்டீரா? கொடுக்க மாட்டீரா? கொடுக்கமாட்டீரா? கொடுக்காட்டி குழந்தைகளை கடற்றிலே போட்டுவிடுவார்கள் டாக்டர் ஆற்றிலே போட்டு விடுவார்கள் என் கல்யாணியும் அப்படித்தான் செய்து விட் டாள் கல்யாணி! கல்யாணி! காட்சி - 45 (கோர்ட்டில் குணசேகரன்) குண : நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பலவழக்குகளை சந்தித்திருக்கிறது புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது ஆகவே இவ்வழக்குவிசித்திரமுமல்ல வழக்காடும்நான் புதுமை. யான மனிதனுமல்ல வாழ்க்கைப்பாதையிலே சர்வசாதாரண மாக காணக்கூடிய ஜீவன் நான் கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் பூசாரியைத் தாக்கினேன் குற்றம் சாட்டம் பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேனென்று. இல்லை! நிச்சயமாக இல்லை! கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/51&oldid=1705914" இலிருந்து மீள்விக்கப்பட்டது